சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.  இந்த படம் தான் முதன் முதலாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சூர்யாவின் படமாகும்,  ஆனால் இறுதியில் படம் தேர்வாகாமல் போனது.  'சூரரை போற்று' வெற்றிக்கு பின்னர் தற்போது மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார், இப்போது சில படத்தில் சூர்யா பிசியாக நடித்துக்கொண்டு இருப்பதால் இந்த படத்தின் பணிகள் தொடங்க கால தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவலின்படி, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன், துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வெளியானது பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்


பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கரை நடிக்கவைக்க அணுகியதாகவும், அதற்கு அவர் இந்த படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.  அதே சமயம் அடுத்த படத்திற்கான பணிகள் குறித்து சுதா கொங்கரா மற்றும் சூர்யா இருவரும் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இயக்குனர் சுதா கொங்கரா குமாரை வைத்து சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.  



அதனால் துல்கர் சல்மான் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் வதந்தி தான் என்றும், நடிகர் சூர்யாவும், இயக்குனர் சுதா கொங்கராவும் அவர்களின் பணிகளை முழுமையாக முடித்த பின்னர் இந்த படம் குறித்து ஆலோசிப்பார்கள் என்றும் சில செய்திகள் கூறப்பட்டுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடிக்க காத்திருக்கிறார், இப்படத்திற்கான இறுதி ஷெட்யூல்கள் கோவாவில் நடைபெற்று வருகிறார்.  அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார்.


மேலும் படிக்க | 2022-ல் இதுவரை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்கள் இவைதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR