2022-ல் இதுவரை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்கள் இவைதான்!

இந்த ஆண்டின் முற்பகுதியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி தமிழகத்தில் வசூலை குவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2022, 02:41 PM IST
  • இந்த ஆண்டு அனைத்து பெரிய ஹீரோக்கள் படங்களும் வெளியானது.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் படம் வெளியாகி உள்ளது.
  • விஜய், அஜித் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
2022-ல் இதுவரை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்கள் இவைதான்! title=

இந்த ஆண்டில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமென்றால் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான 'விக்ரம்' படம் தான்.  இந்த ஆக்ஷன் நிறைந்த தமிழ் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை படைத்து இருக்கிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதோடு, வெற்றிகரமாக திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது.  

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் வசூல் சாதனை படைத்துள்ளது, என்னதான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இயக்குனர் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியிருந்தாலும் படம் அதிகப்படியான வசூலை பெற்றிருக்கிறது.  உலகளவில் 'பீஸ்ட்' படம் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது, இருப்பினும் சில இடங்களில் படம் வருமானத்தை பெற்றுத்தரவில்லை.  

அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் 'வலிமை' படமும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.  இந்த படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது.  அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா வக்கீலாக நடித்திருந்த 'எதற்கும் துணிந்தவன்' படம் மார்ச் மாதம் வெளியானது.  பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  'எதற்கும் துணிந்தவன்' படம் 25 நாட்களில், கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.  

அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டான்' படம் வெளியானது.  கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நகைச்சுவை, செண்டிமெண்ட் என நல்ல பொழுதுபோக்கு  படமாக இருந்தது.  இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 115 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது.

மேலும் படிக்க | ஊடகங்களே என் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் - மீனா வேண்டுகோள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News