பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்"(Etharkum Thunindavan).  இந்த திரைப்டத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கடந்த ஆண்டு ஜூலை-23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.  'பசங்க-2' படத்தை தொடர்ந்து சூர்யா இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  இப்படத்திலிருந்து வெளியான 'வாடா தம்பி', 'உள்ளம் உருகுதையா', 'சும்மா சுர்ருன்னு' போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


ALSO READ | 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!


ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் பிப்ரவரி-3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.  ஆனால் திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியிடாமல் பிப்ரவரி மாதத்தின் மற்றொரு தேதியில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது.  தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டும் அனுமதிப்பதில் இன்னும் விலக்கு அளிக்காத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கும் என்ற கருத்துக்களும் எழுந்து வந்தது.  இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' (Etharkum Thunindavan) படம் மார்ச் மாதம் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.



கொரோனா சூழல் காரணமாக தற்போது தள்ளிப்போன பெரிய படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதி கிடைக்காமல் தவித்து வருகின்றன.  அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இருப்பினும் அதனை கொரோனா சூழலே முடிவு செய்யும்.  சிவகார்த்திகேயனின் DON படமும் இந்த மாதமே வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.


ALSO READ | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR