சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2022, 03:56 PM IST
  • சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
  • சாய்பல்லவி நடித்த NGK, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களில் இவரது திறமையான நடிப்பு, பாராட்டைப் பெற்றது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?  title=

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படுபிஸியான நாயகனாக மாறிவிட்டார்.  இந்த படம் இவரது கேரியரில் நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது.  தற்போது இவர் 'டான்' (DON Movie) பட வேளைகளில் உள்ளார், இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

ALSO READ | சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தியேட்டரா? OTT -ஆ? இதோ அப்டேட்

இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-5ன் ஃபைனல்ஸில் இப்படக்குழு நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.  ஏற்கனவே சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து சில பிராஜெக்டுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.  திரையுலகில் திறமையான கதாநாயகியாக வலம்வருபவர்களுள் சாய்பல்லவி.  சமீபத்தில் இவர் நடித்த NGK, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களில் இவரது திறமையான நடிப்பு பாராட்டைப் பெற்றது.  மேலும் OTTல் வெளியான 'பாவக் கதைகள்' சீரிஸின் ஒரு தொகுப்பில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. 

saipallavi

ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம் இந்தியா இணைந்து தயாரிக்க உள்ளது.  மேலும் படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News