‘எதிர்நீச்சல்’ தாெடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்..? இதோ முழு விவரம்..!
Ethirneechal Salary Details: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா..?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், எதிர்நீச்சல். இந்த தொடரில், பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார். இத்தொடரில் நடிப்பவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்:
தமிழ் சினிமாவிற்கு எந்தளவிற்கு இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மவுசு இருக்கிறதோ அதே அளவிற்கு தமிழ் தொடர்களுக்கும் இல்லத்தரசிகள் மத்தியில் மவுசு இருக்கிறது. குறிப்பாக, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு. அப்படி சமீப காலங்களில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் சீரியல்தான், எதிர்நீச்சல். ஜனனி என்ற பெண்ணையும் அவளது குடும்பம் மற்றும் சகோதரிகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் தொடர் இது. இந்த தொடரில், பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள், ஆணாதிக்கம் போன்ற பல விஷயங்கள் அலசப்படுகின்றன.
மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!
கதை:
"எதிர் நீச்சல்" ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. இந்த குடும்பத்தில் ஆண் ஆதிக்கம், வீட்டு விவகாரங்கள் முதன்மையாக இல்லத்தரசிகள் செயல்படுவது போன்ற பல விஷயங்கள் அலசப்படுகின்றன. நடைமுறையில் உள்ள ஆணாதிக்க நெறிமுறைகளால் அமைதியாக இருக்கும் பெண்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் என்பதை இக்கதை காண்பிக்கிறது. இருப்பினும், இளைய மருமகள் ஜனனி குடும்பத்திற்குள் நுழையும்போது குடும்பத்தின் நிலை மாறுகிறது, அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது மற்றும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட அதிகாரம் அளிக்கும் நிகழ்வுகள் இந்த கதையில் இடம் பெற்றுள்ளது.
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்..
எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக விளங்குகிறார், ஆதி குணசேகரன். இவர், தமிழில் பல படங்களில் நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் தொடரில், “ஏய் இந்தாம்மா..ஜனனி...” என்று இவர் பேசும் டைலாக் மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட இந்த தொடரின் வில்லனே இவர்தான். இந்த தொடரின் ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரும், ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மாரி முத்துதான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹீரோவை விட அதிக சம்பளம்!
ஆதி குண சேகரனாக நடிக்கும் மாரி முத்து ஒரு நாளைக்கு 20,000 ரூபாயை சம்பளமாக வாங்குகிறாராம். ஆனால் இந்த சீரியலில் நாயகி நாயகனுக்கு இதை விட குறைவாகத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.
முழு விவரம்!
இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா ஆகியோர் ஒரு நாளைக்கு 15,000 ரூபாயை சம்பளமாக வாங்குகின்றனராம். ஹீரோவாக நடிக்கும் சபரி பிரசாந்த் மற்றும் நடிகை பிரியதர்ஷினி ஆகியோர் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வாங்குவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் எல்லோரையும் விட, நடிகர் மாரிமுத்துதான் அதிகமாக சம்பளம் பெருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | மாரி செல்வராஜின் உண்மையான முகம் குறித்து கூறிய பிரபல நடிகர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ