தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர், 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். இவர் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்றை, பிரபல நடிகர் பகிர்ந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரியேறும் பெருமாள் இயக்குநர்:


2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் திரையுலகிலேயே பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. சாதிய கொடுமை, அடக்குமுறை, வன்முறை என அனைத்தையும் ஒருங்கிணைத்தார் போல கூறிய இப்படம், கோலிவுட் திரையுலகினருக்கு சினிமாவை பற்றிய புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ஹீரோவாக கதிர் நடித்திருந்தார். கயல் ஆனந்தி, பிரபல நடிகர் மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். 


மேலும் படிக்க | Chef Damu: சமையல் திருவிழா நடத்தும் ‘குக் வித் கோமாளி’ புகழ் செஃப் தாமு..!


மாரி செல்வராஜ் குறித்து மாரிமுத்து..


பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராக வந்து மக்களுக்கு அறிமுகமானவர் மாரிமுத்து. இவர், திரையிலும் சரி உண்மை வாழ்க்கையிலும் சரி, நேர்பட பேசும் கேரக்டராகவே வாழ்ந்து வருகிறார். இவர், தற்போது “எதிர்நீச்சல்” எனும் ஒரு தொடரில் நடித்து இல்லத்தர்சிகளுக்கும் ஃபேவரட் ஆக மாறியுள்ளார். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் குறித்து பேசியிருந்தார். 


“ஹீரோவை எப்படி நடத்தினார் தெரியுமா...”


நடிகர் மாரிமுத்து, மாரி செல்வராஜ்ஜின் டைரக்‌ஷனில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது, அவர் கூறிய பல விஷயங்கள் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தன. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ஹீரோ கதிரை, பிடிவாதமாக பலமுறை முரட்டுத்தனமாக மாரி செல்வராஜ் நடத்தியதாக கூறியுள்ளார், மார்முத்து. இது குறித்து அவர் பேசுகையில், கதிரை வெறும் காலில் மாரி செல்வராஜ் ஓட வைத்ததாகவும் இதனால் ஹீரோவின் காலில் பலமுறை கல்லும் முள்ளும் குத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், பலர் கூறியும் கேட்காமல், “அப்போதுதான் சீன் நன்றாக இருக்கும்..” என கூறி கதிரை மீண்டும் மீண்டும் மாரி செல்வராஜ் ஒட வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம், படத்தில் இடம் பெற்றிருந்த கதிரின் கதாப்பாத்திரம்தான் மாரி செல்வராஜ்ஜின் உண்மையான கதாப்பாத்திரம் என கூறப்படுகிறது. இதற்காகவே கதிரை இந்த அளவிற்கு மெனக்கெட்டு நடிக்க வைத்ததாக மாரிமுத்து கூறியுள்ளார். 


நடிகரை அடித்த மாரி செல்வராஜ்?


பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு தந்தையாக ஒரு ஆட்டக்காரர் நடித்திருப்பார். இவர், முடியை அவிழ்த்துக்கொண்டு ரோட்டில் ஓடுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிக்காக தன்னை பல முறை மாரி செல்வராஜ் அடித்ததாக அந்த நடிகர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இவர், சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். 


தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ்..


கடந்த சில நாட்களாக திரையுலகில் ஹாட் டாப்பிக்காக இருப்பது, கமலின் தேவர் மகன் படமும் மாரி செல்வராஜ்ஜும்தான். மாரி செல்வராஜ் ஒரு நேர்காணலில் தேவர் மகன் திரைப்படம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதன் வெளிபாடாகவே பரியேறும் பெருமாள் படத்தை தான் இயக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த கூற்று பெரிய பஞ்சயாத்தாக போய் முடிய, இது கமல் ஹாசன் வரை சென்றுவிட்டது. 


மேலும் படிக்க | கமல் Vs மாரி செல்வராஜ்! அடுத்த கட்டத்துக்கு சென்ற மோதல்! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ