எதிர்நீச்சல் இன்றைய புரோமோ வீடியோ: சின்னத்திரை தொடர்கள் அனைவரின் வீட்டிலும் ஆட்சி செய்து வருகிறது, மக்களின் கவனங்களை ஈர்க்க பல சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு ஒவ்வொரு சீரியலாக களமிறக்கி வருகின்றது. அந்த வகையில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமாகி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இதில், கதிர் வந்து கையெழுத்து போட்டு தந்தால் தான் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று அரசு மேடையில் சண்டை செய்து கொண்டிருக்கிறார். குணசேகரனும் அரசுவை சமாதானம் செய்வதற்காக மண்டபத்தில் கலவரம் செய்து கொண்டிருக்கிறார்.


மேலும் படிக்க | 26 வயது நடிகை உயிரிழப்பு... துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்!


கதிர் ஒரு பக்கம் குடித்துவிட்டு அறையிலே போதையில் விழுந்து கிடக்கிறார். ஆனால் மண்டபத்தில் மேடையில் மாலை மாற்றியதும் கதிர் வந்து கையெழுத்து போட்டு பேக்டரியை ஆதிரை பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று அரசு பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.


இன்றைய புரோமோவில், நிச்சயதார்த்தம் பத்திரிக்கையை படித்துக் கொண்டிருந்த ஐயரிடம் நிறுத்துங்கள் என்று கூறி கோபத்தில் அரசு, கதிர் எங்கே என்று கேட்டால் தூங்குகிறான் என்று சொல்றீங்க என்று கத்த அதற்கு குணசேகரன் என் தம்பி வருவாயா, இப்ப அதற்கு என்ன? என்று கேட்க, ஜனனி சார்லதாவிடம் எப்படி மேம் இதையெல்லாம் கேட்டுட்டு நீங்க அமைதியா இருக்கீங்க? என்று கேட்கிறார்.


அப்போது மொத்த குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். அதே நேரத்தில் அப்பத்தா இந்த நிச்சயம் நடக்கணுமா? வேண்டாமா? என்று கேட்கிறார். இதற்கு பதில் அளித்த குணசேகரன் அதற்காக தானே நாங்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கோம் என்று கூறினார். தற்போது புரோமோ இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | இயக்குநர் லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! சென்னை நீதிமன்றம் தீர்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ