26 வயது நடிகை உயிரிழப்பு... துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்!

Actress Jung Chae yul Died: நெட்பிளிக்ஸில் உள்ள Zombie Detective என்ற பிரபல கொரியன் சீரிஸில் நடித்து, புகழ்பெற்ற நடிகை கடந்த ஏப். 11 அன்று உயிரிழந்தார்.   

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2023, 08:25 AM IST
  • இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
  • 2016இல் மாடலிங் மூலம் அவர் அறிமுகமானார்.
26 வயது நடிகை உயிரிழப்பு... துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்! title=

Actress Jung Chae yul Died: நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் என பல்வேறு ஓடிடி தளங்களின் மூலம் பல மொழி படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்ப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. நகைச்சுவை தொடர்கள், திரில்லர்கள் தொடர்கள் என அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள். 

மேலும், இதில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது என்றால், கொரியன் தொடர்களை (K-Drama or K-Series) தான் கூற வேண்டும். இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை, அனைத்து தரப்பினராலும் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடர்களாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இந்த கொரியன் தொடர்கள் பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க |  90'S கிட்ஸ்களின் வயிற்றெறிச்சலை கிளப்பிய 2K கிட்ஸ்! 19 வயசுல இதெல்லாம் தேவையா?

குறிப்பாக, தற்போது பல்வேறு தொடர்கள் தங்களின் பிராந்திய மொழிகளிலேயே பார்ப்பதினாலும் இதன் மீதான ஆர்வம் அவர்களுக்கு அதிகரித்துவிட்டது. மேலும், கொரியன் நடிகர்கள் மீதும் அதிக ஈர்ப்பும் உள்ளது. அந்த வகையில், கொரியன் சீரிஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

தென் கொரிய நாடகங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான நடிகை ஜங் சே-யுல், தனது 26ஆவது வயதில் காலமானார். ஜங் சே-யுல் ஏப்ரல் 11 அன்று அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தென் கொரிய நாடகங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான நடிகை ஜங் சாய்-யுல் தனது 26 வயதில் காலமானார்.

"மிகவும் மன வேதனைக்குரிய மற்றும் துரதிர்ஷ்டவசமான செய்தியை நாங்கள் வழங்க வேண்டும். நடிகை சா-யுல் ஏப்ரல் 11ஆம் தேதி எங்களை விட்டு பிரிந்தார். அவரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் நடைபெறும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிப்பதற்கு முன், அவர் மாடலிங் துறையில் செயல்பட்டார். அவர் 2016இல் கொரிய மாடலிங் நிகழ்ச்சியான டெவில்ஸ் ரன்வேயில் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். அவரது திருப்புமுனை நடிப்பு நெட்பிளிக்ஸ் தொடரான Zombie Detective-இல் இருந்தது, தற்போது அவர் Wedding Impossible என்ற தொடரின் படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

மேலும் படிக்க | லாரன்ஸ் உடன் நடிக்க பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News