ரஜினி அரசியலுக்கு வந்தால், பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக, அதன் நோக்கம் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் லதா ரஜினிகாந்த் எடுத்துரைத்தார். 


நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த்:-


தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம். தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம். 


குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும் என்றார்.


இதற்கிடையில் நிருபர்கள் அவரிடம், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் சொல்ல வேண்டும். ரஜினியின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதை செய்வார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தனி மனிதராக அவர் எடுக்கக் கூடிய முடிவை குடும்பமாக நாங்கள் மதிக்கிறோம். அவர் என்ன முடிவெடித்தாலும் ஆதரிப்போம். 


இவ்வாறு அவர் கூறினார்.