சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். நடிகர் ஷாம், ராதிகா, மற்றும் அருண் விஜய் நடித்த இயற்கை திரைப்படத்தை இயக்கியவர் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். மிகவும் பாராட்டப்பட்ட இயற்கை திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

61 வயதான இவர் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு லாபம் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருந்த அவர், மதிய உணவுக்குச் சென்றவர் மீண்டும் வரவில்லை. இதையடுத்து பிற்பகல் மூன்றரை மணிக்கு மேல் ஜனநாதனின் உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.


உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.



ஜீவா நடித்த ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை, பூலோகம் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அவரது திரைப்படங்கள் வலுவான சமூக அக்கறையுடன் மாறுபட்ட கருப்பொருள்களை கொண்டவை.


Also Read | தமிழ்நாடு தேர்தல் 2021: திமுக எம்.எல்.ஏ டாக்டர் பி. சரவணன் பிஜேபியில் இணைந்தார் 


2015 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிகவும் பேசப்பட்டது. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் திரைப்படத்தை தற்போது இயக்கி வந்தார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.  


அவரது படங்கள், கம்யூனிசத்தின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலித்தன. தனது கருத்தைத் தெரிவிக்க மறைமுக கதை நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நேரடியாக தைரியமாக எடுத்துரைப்பவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.



பேராண்மை திரைப்படம், மார்க்சிச கருத்துக்களை முன்வைப்பதாக இருந்தது. தனது திரைப்படங்களில், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் சரியான அளவில் பயன்படுத்துவார்.  


Also Read | Legend Saravanan படத்தின் கதாநாயகி இவர்தான்: விரைவில் வெளிவருகிறது படம்!!


தமிழ் திரைப்பட உலகம், இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் மறைவுக்காக தங்கள் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் #RIPSPJananathan என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது. ஜனநாதனின் திரைப்படங்கள் சமூகத்தின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலிப்பதால் என்றென்றும் நினைவில் இருக்கும் என்று பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ட்விட்டரில் கூறினார்.


நடிகைகள் ஸ்ருதிஹாசன், குஷ்பூ, நடிகர் சிபி சக்ரவர்த்தி உள்ளிட பலரும் இயக்குநரின் மறைவுக்கு அஞ்சலி செய்துகின்றனர்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR