பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்!
பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று சென்னையில் காலமானார்
மலையாள நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் இன்று காலை சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். பிரதாப் இன்று காலை அவரது சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். 1980 களில் இருந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருந்துள்ளார். நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தார். ஆகஸ்ட் 13, 1952-ல் பிறந்த இவர், 15 வயதிலேயே தனது தந்தை கொளத்திங்கால் போத்தனை இழந்தார்.
ஊட்டியில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பட்டப்படிப்புக்காக சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மும்பை விளம்பர நிறுவனத்தில் நகல் எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நடிகை ராதிகாவை திருமணம் செய்து ஓராண்டுக்கு பிறகு, அமலா சத்தியநாத்தை மறுமணம் செய்து கொண்டார். 22 வருட திருமணத்திற்குப் பிறகு 2012-ல் இவர்கள் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு கேயா என்ற மகள் உள்ளார்.
1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் திரைப்படத்தில் அறிமுகமானார் பிரதாப். தகரம், ஆரோகணம், பன்னீர் புஷ்பங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான மலையாளத் திரைப்படங்கள் ஆகும். இவர் கடைசியாக மம்மோட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்தில் நடித்தார். மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்தார். இவர் மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். 'கிரீன் ஆப்பிள்' என்ற விளம்பர நிறுவனத்தையும் வைத்திருந்தார்.
தமிழில், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி மற்றும் லக்கி மேன் படங்களில் நடித்து இருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ