கேரள மாநிலம் கொச்சியை அடுத்த களமச்சேரியில் பிரபல மலையாள வில்லன் கதாபாத்திர நடிகர் என்.டி.பிரசாத் தனது வீட்டின் முன்னே உள்ள மரத்தின் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடும்ப தகராறு காரணமாக பிரசாத்தின் மனைவி அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் அவருக்கு தனிப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக தெரிகிறது. மிகுந்த மன அழுத்தத்தோடு அவர் காணப்பட்டதாக அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். 


இந்நிலையில் அவர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை முதலில் இவரது குழந்தைகள் தான் பார்த்ததாக தெரிகிறது. 


மேலும் படிக்க | UAE: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; உம் அல் குவைனில் புதிய வேக கண்காணிப்பு ரேடார்கள்


பின்னர் அக்குழந்தைகள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். பிறகு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.


பின்னர் ஜூன் 26 ஆம் தேதி உடற்கூராய்வுக்குப்பின் அவரது உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு இன்று அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைப்பெற்றன.


பிரபல நடிகரான பிரசாத் இதுவரை 40க்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்துள்ளார். சில படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் இவர் குறித்து போலீஸார் கூறுகையில், பல்வேறு காவல் நிலையங்களில் பிரசாத் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 


மேலும், எர்ணாகுளம் கலால் வட்டம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR