காருக்குள் அத்துமீறி ஏறிய இளைஞர்... கூச்சலிட்ட ஷில்பா ஷெட்டி
நடிகை சில்பா ஷெட்டியின் காருக்குள் நுழைந்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷில்பா ஷெட்டி பாலிவுட்டில் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி குஷி படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாடியுள்ளார்.
தொடர்ந்து பாலிவுட்டில் நடித்துவந்த ஷில்பா தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார்.
தற்போது படங்களில் பிஸியாக நடிக்காவிட்டாலும், அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி கண்ணாவுடைய மகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க, மும்பை ஜூஹு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு தனது மகளுடன் ஷில்பா சென்றிருந்தார். விழா முடிந்தபின் வீட்டுக்கு திரும்ப தனது காரில் வந்து ஏறியபோது இளைஞர் ஒருவர் ஷில்பா ஷெட்டியின் காருக்குள் அத்துமீறி நுழைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷில்பா ஷெட்டி கீழே இறங்குபடி அந்த இளைஞரிடம் கத்தி கூச்சலிட்டார். ஷில்பாவின் சத்தத்தை கேட்ட பாதுகாவலர்கள் உடனடியாக அங்கு வந்து இளைஞரை காரிலிருந்து வெளியே இழுத்தனர். அதன் பிறகு ஷில்பாவை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் படிக்க |அஜித் 61 கதையை முதலில் கேட்ட ஹீரோ யார் தெரியுமா - விஜய் வெளியிட்ட தகவல்
இதனையடுத்து அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது மகளுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே காருக்குள் ஏறியதாக கூறினார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | இந்திய துணைக் கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR