நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ஃபர்ஹானா. இப்படம், வெளியாவதற்கு முன்னரே நிறைய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. இன்று, ,இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபர்ஹானா திரைப்படம்:


மான்ஸ்டர் படத்தை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் வெங்கடேசன் இயக்குயுள்ள படம், ஃபர்ஹானா. இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை வெளிவர இருக்கும் கேரளா ஸ்டோரீஸ் திரைப்படம், ஏற்கனவே இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அப்படம் இஸ்லாமியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், அப்படத்திற்கு தடை விதிக்க கோரி சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அதையும் மீறி அப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படத்திலும் அவர் ஒரு இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளதால் இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்புமோ என்ற சந்தேகம் படக்குழுவிற்கு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!


பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு:


ஃபர்ஹான படம், இம்மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடக்கிறது. இந்த சந்திப்பிற்கு சுமார் 20 போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 


ஃபர்ஹானா கிளப்பிய சர்ச்சை:


ஃபர்ஹானா மற்றும் தி கேரளா ஸ்டோரி படங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு முன்னரே தமிழில் வெளியான படம், புர்கா. இந்த படம், இஸ்லாமியர்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. இதை தொடர்ந்து வெளிவர இருக்கும் கேரளா ஸ்டோரி படமும் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த லிஸ்டில் தமிழில் வெளிவர இருக்கும் ஃபர்ஹானா படமும் சேர்ந்துள்ளது. 


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஃபர்ஹானா படத்தை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரில், “ஃபர்ஹான போன்ற திரைப்படங்கள், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை மத ரீதியான பிரச்சனைகளை வைத்து சீர் குலைப்பதாகவும் இதை தமிழக காவல் துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். 


சர்ச்சைகளை சந்தித்து வரும் மத ரீதியான படங்கள்:


கடந்த சில மாதங்களாக, மதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்கள் யாவும் மக்களிடையே பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. புர்கா படம், இஸ்லாமியர்களின் உணவர்களை அவமதித்ததாக கூறி பெரும் பேச்சுக்குள்ளானது. அந்த படத்தின் இயக்குநர் சர்ஜுனிற்கு பலரால் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அவர் தனது சமூக வலைதள கணக்கையே நீக்கிவிட்டார். அப்படத்தில் நடித்திருந்த நாயகன் கலையரசன் மிர்னா மேனன் ஆகியோரும் படம் குறித்து எதுவுமே பேசவில்லை. 


பிரதம் மோடி, கர்நாடகாவில் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த பிரச்சாரத்தின் போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு முழு ஆதரவி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், இப்படம் இந்தியாவில் தீவிரவாதம் நுழைவதற்கான புதிய வழியை காட்டுவதாக கூறியுள்ளார். இதனால், கேரளா ஸ்டோரியின் கதை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 


மேலும் படிக்க | போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ