முதல் முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது டைட்டில்!

'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 08:15 AM IST
  • டியர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
  • ஜிவி - ஐஸ்வர்யா முதன் முறையாக நடித்துள்ளனர்.
  • ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் தயாராகிறது.
முதல் முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது டைட்டில்! title=

'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாக்ஷி பணியாற்றியிருக்கும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது குந்தவையாக நடித்தது யார் தெரியுமா?

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக்  ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நரேன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் பல சுவாரஸ்யங்களூட்டும் காட்சிகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகுந்த வரவேற்பைப் பெரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜிவி பிரகாஷ் குமார் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பல பெரிய படங்களில் இசையமைப்பாளராக கமிட் ஆகி வருகிறார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் இசையமைத்து வருகிறார் ஜீவி பிரகாஷ். சமீபத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார் ஜிவி பிரகாஷ். ராணுவ களத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்தனர். 

ஒருபுறம் படங்களில் நடித்தும் பல பெரிய படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் ஜி வி பிரகாஷ்.  ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு முன்னணி கதாபாத்திரம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
அடுத்ததாக பர்கானா எனும் படம் வெளியாக உள்ளது.  சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷை சூப்பர் ஸ்டார் என கூறியது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு என்னறைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் எனக்கூறி இருந்தார்.  

மேலும் படிக்க | ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News