`இம்சை அரசன் 24-ம் புலிகேசி`: ஃபர்ஸ்ட்லுக் வெளியானது!
கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.
வடிவேலு, மனோரமா, நாசர், தேஜ ஶ்ரீ, மோனிக்கா, இளவரசு, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசையமைத்திருந்தனர்.
தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் பாகத்தின் இயக்குனர். இந்த பாகத்தை இயக்குநர் ஷங்கரும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். வடிவேலு நடிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியானது.