தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது சரத்குமார் மற்றும் விதார்த் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள்.


மேலும் படிக்க | ‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?


சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், இவர்களுக்கு எதிர் கதாநாயகனாக நடிக்க மலையாள நடிகர் ஆர். நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.


மேலும் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் IAS அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படமாகும். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது இதுதான் படத்தின் அடிப்பட கதையாகும். 
 
தொழில்நுட்பக் குழு விவரம்:


ஒளிப்பதிவு: குமார் ஸ்ரீதர்,
இசை: வேத் சங்கர் சுகவனம்,
கலை இயக்குநர்: ஸ்ரீமன் பாலாஜி,
பாடல் வரிகள்: மணி அமுதன், 
சண்டைப்பயிற்சி: விக்கி, 
காஸ்ட்யூமர்: எஸ். நாக சத்யா, 
தயாரிப்பு மேலாளர்: மணி தாமோதரன், 
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
படங்கள்: பாலாஜி.


முன்னதாக கடந்த 11 ஆம் தேதி சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் அற்புதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் சரத்குமார். 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இவர் வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி, அதேபோல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் பல முக்கிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் சரத்குமார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் என்கிற மூன்று திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்திய அளவில் அதிக வசூல் சாதனை செய்த படம் எது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ