செய்த பணிகள் ஏராளம்... சின்னக்கலைவாணர் விவேக் நினைவாக வனப்பூங்கா
நடிகர் விவேக் நினைவாக கோவையில் `Be Happy` வனப்பூங்கா உருவாகிறது.
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவ நடிகர் விவேக். கே. பாலசந்தர் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தனது தனித்துவ நடிப்பாலும், நகைச்சுவையாலும் நீங்காத இடம் பிடித்தவர்.
வெறும் நகைச்சுவை மட்டும் செய்யாமல் தன் நகைச்சுவையோடு பல பகுத்தறிவு, முற்போக்கு கருத்துக்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர். கருத்து சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் பல நல்ல விஷயங்களையும் செய்தவர் விவேக்.
அதில் ஒன்றுதான் மரம் நடுதல். அப்துல் கலாம் மீது தீவிரமான பற்று உடைய விவேக் அவரது நினைவாக தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்களை நடும் திட்டத்தை தொடங்கினார். அந்தத் திட்டத்தின் கீழ் ஏகப்பட்ட மரங்களை நட்டும், மரங்கள் நடுவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பல்வேறு நல்ல விஷயங்களில் ஈடுபட்டுவந்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடு அரசு, தெருவுக்கு அவரது பெயரையும் வைத்து கௌரவித்தது.
இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது நினைவாக Be Happy என்ற பெயரில் ஒரு வனப்பூங்காவை அமைக்க சிறுதுளி அமைப்பு திட்டமிட்டது.
பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையம் சென்ட்ரல் எக்சைஸ் காலனியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறுதுளி அமைப்பின் 19ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் விவேக்கின் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு பூமி பூஜை பச்சாபாளையத்தில் இன்று நடந்தது. விழாவில் பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, சிறுதுளி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், “நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து மக்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் விதைத்தவர். சிறுதுளி அமைப்புடன் இணைந்து பல்வேறு சூழல் பணிகளை கோவையில் செய்துள்ளார்.
மேலும் படிக்க | ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு - கலந்துகொண்ட முதலமைச்சர்
அவரின் நினைவாக ஒரு ஏக்கரில் Be Happy வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர். முன்னதாக பாடகர் எஸ்பிபிக்கும் இந்த அமைப்பு வனப்பூங்கா அமைத்தது. அதனை விவேக்தான் திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நடிகர் அல்லு அர்ஜுன் மீது திடீர் வழக்கு- மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR