நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஜி,ஆர், நாகேஷ் உள்ளிட்ட பல பழம்பெரும் நடிகர்களுடன் நடித்தவர், மனேரமா. மேடை நாயகியாக தனது திரைவாழ்க்கையை தொடங்கி, அன்றைய முன்னணி ஹீரோக்கள் முதல், இன்றைய இளம் நடிகர்கள் வரை பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோகமான சிறுவயது வாழ்க்கை..


ஆச்சி மனோரமாவிற்கு தஞ்சாவூர் பக்கம்தான் பூர்வீகம். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கோபிசாந்தா. சிறுவயதிலேயே, இவரது அம்மாவை அப்பா புறக்கணித்தார். அது மட்டுமன்றி அம்மாவின் தங்கையையே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சிறுமி கோபிசாந்தாவை அவரது அம்மா காரைக்குடிப் பக்கம் அழைத்துக்கொண்டு வந்தார். இவர்கள், கோட்டையூர் அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார். அங்கே, ஒரு ரோட்டில் பலகாரக் கடை போட்டனர். அந்த சம்பாதியத்தில் பாதிவயிறுதான் இருவருக்கும் நிறைந்தது. இதனாலேயே மனோரமாவின் படிப்பு ஆறாவதுடன் நின்றது போனது. வருமானம் போதாததால் சிறுமியாக இருந்தபோதே வீட்டி வேலை செய்தார், மனோரமா. துறுதுறுவென இருந்தன இருந்த சிறுமி கோபிசாந்தாவை ஊரில் பலருக்கும் பிடித்துப் போனது.


மேலும் படிக்க | 60 வயதில் 2வது திருமணம் செய்துக் கொண்ட பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்


ஆச்சி பெயர் காரணம்:


காரைக்குடிப்பக்கம், பெண்களை ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். பள்ளத்தூரில் இருந்த மனோரமாவை, நகரத்தார் என்று நினைத்தார்களோ என்னவோ... அல்லது மரியாதையாய் அழைக்கவேண்டும் என்றோ என்னவோ... ‘ஆச்சி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். ‘கோபிசாந்தா’, ‘மனோரமா’வானார். ‘மனோரமா’ ஆச்சி என்று அழைக்கப்பட்டார்.


உள்ளூர் நாடகக்குழு


மனோரமா புகழை எட்ட உறுதுனையாக இருந்ததற்கு அவரது பாடல்களும் ஒரு காரணம். பாடலை காட்டிலும் நடனமும் மிக நன்றாகவே ஆடுவார். இதனால் உள்ளூர் நாடக்குழுவில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நடிப்பைப் பார்த்து எல்லோரும் அசந்துபோனார்கள். கடையில் சுடச்சுட வழங்கிய பலகாரங்களை விட, அவரின் பல பரிமாணங்கள் இன்னும் தித்தித்தன. எஸ்.எஸ்.ஆர், இவரின் நடிப்பைக் கண்டு பிரமித்துப் போனார். இதனால் அவரை தனது நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார். கவியரசர் கண்ணதாசன், தான் தயாரித்த படத்திலேயே இவரை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்து இடமாற்றம், பெயர் மாற்றம், தலையெழுத்தே மாற்றம் என அத்தனையும் நடைப்பெற்றது. 


ஆரம்ப கால சினிமா வாழ்க்கை:


ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்கள்தான் மனோரமாவிற்கு கொடுக்கப்பட்டது , பின்னர் மெல்ல மெல்ல காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். மனோரமா முகபாவனைகளும் நக்கலான பேச்சும் காண்போரை கவர்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்..ஆர், முத்துராமன், ஜெய்சங்கர் என அந்தக் காலத்தில் எல்லா நடிகர்களுடனும் நடித்துள்ளார்.  


பழம் பெரும் நடிகர்களுடன்..


அந்த காலத்தின் முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் மனோரமாவிற்காக ஒதுக்கப்பட்டது. கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, ஜித்,விஜய் என அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.


ஏ.கருணாநிதி,தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் என ஏகப்பட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். மனோரமா யாருடன் நடித்தாலும் அவர்களுக்கு சரியான ஜோடியாகப் பொருந்தினார்.


‘உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியாக நடித்தார். எம்ஜிஆருடன் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தார். தேவர் பிலிம்ஸ், ஏவிஎம், பத்மினி பிக்சர்ஸ், முக்தா பிலிம்ஸ் என முக்கிய நிறுவனங்களில் நடித்தார். அதேபோல், கே.பாலாஜி தயாரித்த எல்லாப் படங்களிலும் மனோரமாவுக்கு ஓர் அற்புதமான கேரக்டர் நிச்சயம். 
ஏ.பீம்சிங், ஏபி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், கே.பாக்யராஜ், ஷங்கர் என அன்று தொடங்கி இன்றைய இயக்குநர்கள் வரை மிகப்பெரிய ரவுண்டு வந்தார்.


’எதிர்நீச்சல்’, ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘புதிய பறவை’, ‘அன்பே வா’, ’சூரியகாந்தி’ என பல படங்களில் இவரின் தனித்துவமான நடிப்பு எல்லோராலும் ஏற்கப்பட்டதுடன் மறக்க முடியாததாகவும் அமைந்தது.


அற்புதமான பாடகி


‘வா வாத்யாரே வூட்டாண்டே...’ ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ என்று மெட்ராஸ் பாஷைப் பாடல்களும் ’தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்று பிராமண பாஷைப் பாடலும் ‘முத்துக்குளிக்க வாரீயளா’ என்று தூத்துக்குடி பாஷையிலும் பாடி அசத்தியிருக்கிறார். அவ்வளவு ஏன், இவர் சில தெலுங்குப் பாடல் கூட பாடியிருக்கிறார். இப்படி பல திறமைகளை கொண்ட மனோரமா 2015ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார். 


மேலும் படிக்க | Prakash Raj: ‘ஹாய் செல்லம்’ வில்லத்தனத்திலும் ஹீரோயிசம் காட்டிய பிரகாஷ் ராஜ்ஜிற்கு பிறந்தநாள் இன்று..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ