‘நடிகர் திலகம்’ என அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசனுக்கு அந்த பட்டத்தை பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த படம், வீரபாண்டிய கட்டபொம்மன். படத்தின் கதை, சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை சுற்றியே சுழலும்.
யார் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன்?
பிரிட்டீஷ் அரசாங்கம் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் தோன்றினர் என்பது அனைவரும் அறிந்த கதை. ஆனால் சுதந்திர எழுச்சிக்கு காரணமாக ஒரு சிலர்தான் இருந்திருப்பர். அந்த வெகு சிலரில் மிகவும் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பிரிட்டீஷ் அரசாங்கம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தமிழர்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இதனை எதிர்த்து வெகுண்டெழுந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயரின் பிரிட்டீஷ் இந்தியா கம்பெனியை எதிர்த்து சண்டையிட்டார். பிறகு அரசாங்கத்தை எதிர்த்த குற்றத்திற்காக கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலடப்பட்டார் கட்டபொம்மன். இவரைப்பற்றி நாடகங்களும் கதைகளும் புத்தகங்களும் அந்த காலத்திலேயே மிகவும் பிரபலம். இந்த உண்மையான கதாப்பாத்திரத்தையும் அவருக்கு நேர்ந்த துயரத்தையும் வைத்து எடுக்கப்பட்ட படம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
சிவாஜி விரும்பி நடித்த படம்:
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை எடுத்த பி.ஆர் பந்தலுவும் அதில் ஹீரோவாக நடித்திருந்த சிவாஜியும் நல்ல நட்பு பாராட்டியவர்கள். இவர்கள் கூட்டணியில் அதற்கு முன்னர் வெளியாகியிருந்த தங்கமலை ரசசியம் மற்றும் சபாஷ் மீனா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட் அடித்தன. நெடு நாட்களாக வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என அவா கொண்டிருந்த சிவாஜி தனக்காக அந்த படத்தின் கதையை எழுதி தருமாறு சக்தி கிருஷ்ணசுவாமியிடம் கேட்டுக்காெண்டார். அந்த கதையை படத்தில் பார்த்த பிறகுதான் தெரிந்தது, அதில் நடிப்பதற்காகவே பிறந்தவர் சிவாஜி என்று.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த வீரமிகு வசனங்களும் சிவாஜி கனேசனின் உடல் மொழியும் சுதந்திர இந்தியாவிற்காக போராட “நாமும் அந்த காலத்தில் பிறந்திருக்கலாமோ” என நம்மையே யோசிக்க வைக்கும்.
சுதந்திர தாகத்தை தீர்த்த படம்:
பிரிடீஷ் அரசாங்கத்தின் ஆட்சிகாலம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் சுதந்திர தாகம் தனியாமல் இருந்தது. அந்த சமயத்தில் அவர்களின் தேடலை தீர்க்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்த படம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு எதிரான ஒவ்வொரு வசனத்திற்கும் விசிலடித்து அனல் பறக்க விட்டனர் நம்ம ஊர் ஆட்கள். குறிப்பாக “வரி..வட்டி கிஸ்தி..யாரை கேட்கிறாய் வரி..எதற்கு கேட்கிறாய் கிஸ்தி..” என்ற இந்த வசனம் வரலாற்றிலேயே இடம் பெற்று விட்டது. தமிழ் படங்களில் நடிப்பதற்கு அடுத்தடுத்து ஆடிஷனிற்கு வந்தவர்களை இந்த டைலாக் பேச வைத்துதான் தேர்ந்தெடுக்கவே செய்தார்கள்.
பன்னாட்டு விருது வாங்கிய முதல் படம்!
1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை காண, ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்த வண்ணம் இருந்தனர். இப்படம் 25 வாரங்களை வெற்றிகரமாக கடந்து சில்வர் ஜூப்ளியை எட்டி, வசூலிலும் மகத்தான சாதனையை படைத்தது. அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன், மறுபடியும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். 30 ஆண்டுகள் கழித்து வெளியிட்ப்பட்டலும் அந்த சுவடே தெரியாத அளவிற்கு 30 வாரங்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, மீண்டும் சாதனை படைத்தது வீரபாண்டிய கட்டபொம்மன்.
1960 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இண்டோ-ஆஃப்ரிக்கன் விருது நிகழ்ச்சியில் இந்த படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த படம் மற்றும் சிறந்த இசை ஆகிய விருதுகள் கிடைத்தன. அந்த காலத்தில் பன்னாட்டு விருதினை வாங்கிய முதல் படம் இதுதான் என்ற வரலாற்றை படைத்தது, வீரபாண்டிய கட்டபொம்மன்.
மேலும் படிக்க | Thalapathy 68: வெங்கட் பிரபு கதைக்கு ஓகே சொன்ன விஜய்...? விரைவில் வரும் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ