அட்லீயை ‘வாடா போடா’ என அழைத்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ..
Viral Video Of Keerthy Suresh Atlee : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீயை வாடா போடா என அழைத்த வீடியோ இணையத்டில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Keerthy Suresh Atlee : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இந்தியில் வெளியாக இருக்கும் பேபி ஜான் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோஷன் விழாக்களில் எடுக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி-அட்லீ நட்பு:
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் திரையுலகில் பல்வேறு நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். சமந்தா, த்ரிஷா, விஜய், சஞ்சய் என இவருக்கு பல நண்பர்கள் இருக்கின்றனர். அப்படி, அவருக்கு நண்பராக இருப்பவர்களுள் ஒருவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான தெறி படம், இந்தியில் ரீ-மேக் ஆகியுள்ளது. இதனை, அட்லீதான் தயாரித்து வழங்குகிறார். அதன் பெயர் பேபி ஜான். அந்த படத்தில், தமிழில் சமந்தா நடித்த கேரக்டரில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதற்கான ப்ரமோஷன் விழாக்களில் அட்லீ, பிரியா, கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேபி ஜான் படத்தின் ப்ரமோஷன் விழாக்களில் அட்லீ, கீர்த்தி சுரேஷ், பிரியா, வருண் தவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், அட்லீ தனது மனைவி பிரியாவையும் கீர்த்தி சுரேஷையும் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை வீடியோ எடுக்கும் ஒரு நபர், “நீங்கள் இயக்குநர் என்பது தெரியும். ஆனால் இங்கு போட்டோ எடுப்பவராகவும் மாறியிருக்கிறீர்கள்” என்று கேட்க அதற்கு அட்லீ “ஆமாம், எல்லாம் லைஃப் ட்ரைனிங்” என்கிறார். அதற்கு அந்த நபர் “லைஃப் ட்ரைனிங்கா, வைஃப் ட்ரைனிங்கா” என்று கேட்க அதற்கு அவர் வைஃப் ட்ரைனிங் என்கிறார். இடையில் வரும் கீர்த்தி சுரேஷ், “டேய் என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க..” என்று கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆன ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!
மேலும் படிக்க | 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு ஜாஸ்தி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ