Bigg Boss 8 Tamil Eviction Ranjith Salary : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதில் இருந்து புதிதாக ஒரு பாேட்டியாளர் வெளியேறி இருக்கிறார்.
எவிக்ட் ஆன ரஞ்சித்!
திரையுலகில் நண்பன் கதாப்பாத்திரங்களிலும், வில்லன் கேரக்ட்ர்களிலும் நடித்து வந்தவர் ரஞ்சித். இவர், சமீப காலமாக பாக்கியலக்ஷமி தொடரிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்தார். இவர், சில மாதங்களுக்கு முன்பு இயக்கிய கவுண்டம்பாளையம் படம் இவருக்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்தது. இதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தார். இதன் பிறகு ரசிகர்களுக்கு இவர் மீதிருந்த அபிப்ராயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனாலும், இவர் இந்த இல்லத்தில் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வாரம் நாமினேஷனில் இவருடன் மஞ்சரி, ராயன் உள்ளிட்டோரும் இருந்தனர். மக்கள் மத்தியில் மிகக்குறைவாக வாக்குகளை பெற்ற இவர்களில், ரஞ்சித் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
வாங்கிய சம்பளம்:
பிக்பாஸை பொறுத்தவரை, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் அந்த இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தொகை என்ற வகையில் மொத்தமாக கடைசியில் சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில், ரஞ்சித்தும் ஒரு நாளைக்கு சுமார் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்தான், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். இவர் தற்போது 77 நாட்கள் வரை இந்த இல்லத்தில் இருந்திருக்கிறார். இதனால் இவருக்கு மொத்தமாக 38 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இதுவரை வெளியேறியவர்கள் யார்?
பிக்பாஸ் 8 இல்லத்தில் மொத்தம் 24 போட்டியாளர்கள் இருந்தனர். இதில், வைல்ட் கார்ட் மூலம் வந்த போட்டியாளர்களும் அடக்கம். இதில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் ரவீந்தர். அடுத்தடுத்த வாரங்களில் அர்ணவ், தர்ஷா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவா, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்த லிஸ்டில் தற்போது ரஞ்சித்தும் சேர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!
போட்டியில் இருப்பவர்கள் யார்?
பிக்பாஸ் இல்லத்தில் இப்போது அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ரானவ், சௌந்தர்யா, விஷால் உள்ளிட்ட 12 பேர் இருக்கின்றனர். இதில் முத்துக்குமரன், ஜாக்குலின், செளந்தர்யா மற்றும் ரானவ் டஃப் கொடுக்கும் பாேட்டியாளர்களாக இருக்கின்றனர்.
பிக்பாஸ் 8 :
தமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒரு சில மட்டும்தான் மக்கள் மத்தியில் கவனம் இருப்பதாக இருக்கிறது. அப்படி, அதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன், அக்டோபர் 6அம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை இந்த சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பாெதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட ஆட்களைத்தான் போட்டியாளர்களாக இறக்குவர். இவர்களில் பெரும்பாலானோர் டிஜிட்டல் முகங்களாகவும், ஒரு சிலர் சமூக வலைதளம் மூலம் பிரபலமானவர்களாகவும், இன்னும் சிலர் சினிமாவில் துணை நடிகர்களாக நடித்தவர்களாகவும் இருப்பர். ஆனால், இந்த சீசனில் ஒரே தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்கள்தான் பங்கேற்றிருக்கின்றனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ