பெண்ணை மடிமேல் தூக்கி வைத்து வைப் செய்யும் மேளக்காரர்! வைரல் வீடியோ..

Viral Video Of A Dholi : ஒரு பெண்ணை மடி மீது தூக்கி வைத்துக்கொண்டு மேளம் அடிக்கும் ஒருவர் வைப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 21, 2024, 05:44 PM IST
  • பெண்ணை மடிமேல் தூக்கி வைத்த நபர்
  • மேளம் அடித்துக்கொண்டே வைப் செய்யும் காட்சி
  • வைரலாகும் வீடியோ...
பெண்ணை மடிமேல் தூக்கி வைத்து வைப் செய்யும் மேளக்காரர்! வைரல் வீடியோ.. title=

Viral Video Of A Dholi : மக்களுக்கு முன்னர், டிவி பார்ப்பதும் ரேடியோ கேட்பதும் பொழுது போக்காக இருந்தது வந்தது. ஆனால், இப்போது அனைத்தும் ஒரு சிறிய பெட்டிக்குள் அடங்கியிருப்பது போல, கையடக்கமாக இருக்கும் செல்போனுக்குள் இருக்கும் பல விஷயங்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளம் இளசுகளை ஆட்கொள்ளும் வகையிலான வீடியாேக்களால் நிரம்பியிருக்க, பேஸ்புக் உள்ளிட்ட சில தளங்கள் வயதில் அதிகமானவர்களை கவரும் வகையிலான வீடியோக்களை கொண்டிருக்கிறது. இப்படி வைரலாக பகிரப்படும் விஷயங்களால் பல சமயங்களில் அச்சுறுத்தும் வகையிலான விஷயங்களும் நடக்கிறது, நம்மை குஷிப்படுத்தும் வகையிலான விஷயங்களும் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

இசையையும் இந்தியர்களையும் யாராலும் பிரிக்கவே முடியாது. நம்ம ஊர் தாரைத்தப்பட்டையில் இருந்து, புல்லாங்குழல் இசை வரை நாம் எதற்கும் வைப் செய்ய தவறுவதே இல்லை. இசைக்கும் மூளைக்கும் ஒரு தொடர்பு கூட இருக்கிறது. நாம் சோர்வாக இருக்கும் சமயத்தில் கூட, நடனமாட வைக்கும் இசையை கேட்டால் உடனே துடிப்பாகி விடுவாேம். அந்த அளவிற்கு டோபோமைன் ஹார்மோனை உற்பத்தி செய்யும் அம்சமும் இசைக்கு உள்ளது. அப்படி, ஒரு பெண் வைப் மண்டைக்கு ஏறியவுடன் மேளக்காரருடன் சேர்ந்து செய்யும் விஷயம்தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. 

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் மேளத்தின் முன் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார். மேளத்தை மடியில் வைத்துக்கொண்டு டோல் அடிக்கும் அந்த நபர், ஆடிக்கொண்டிருந்த பெண்ணை தன் மடிமீல் இருந்த டோல் மீது தூக்கி உட்கார வைத்து விட்டார். அந்த பெண்ணும் அமர்ந்தவுடன் நிப்பாடாமல் ஆட ஆரம்பித்து விடுகிறார். இதைப்பார்த்த ஒருவர், அந்த பெண்ணுக்கு சுத்தி போட்டு கையில் ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார். அந்த பெண்ணும் ஆனந்தமாக வாங்கிக்கொள்கிறார். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சிலர் குறும்புத்தனமாக பல வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர், அந்த பெல்ட் அறுந்து போனால் அந்த பெண்ணின் நிலை அவ்வளவுதான் என்றும் கவலை தெரிவித்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..

மேலும் படிக்க | டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News