இறங்கி செய்யணும் - கொந்தளித்த கௌதம் மேனன்; சண்டைக்கு தயாரான ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யணும் போல தோணுது என இயக்குநர் கௌதம் மேனன் கூறியதையடுத்து ட்விட்டரில் ப்ளூசட்டை மாறன் கௌதமை கலாய்த்து பதிவிட்டுவருகிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படம் கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். ஜெயமோகன் எழுதிய ‘ஐந்து நெருப்புகள்’ என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவான படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படமானது கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது.
ஆனால் படத்தை விமர்சனம் செய்த விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெந்து தணிந்தது காட்டை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். பார்த்திபன் எப்படி விருது பைத்தியமோ அதுபோல் கௌதம் மேனன் வாய்ஸ் ஓவர் பைத்தியம் என வரம்பு மீறி விமர்சனம் செய்திருக்கிறார். பொதுவாக அவர் அனைத்து படங்களையும் இப்படி விமர்சிப்பவர்தான். ஆனால் பெரும்பான்மையான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெந்து தணிந்தது காடு படத்தை அளவுக்கு மீறி விமர்சித்ததை சிம்பு ரசிகர்களும் சரி, இயக்குநர் கௌதம் மேனனும் சரி ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுகுறித்து இயக்குநர் கௌதம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ப்ளூ சட்டை மாறன் மீது எனக்கு பயங்கர கடுப்பு. அவருக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைக்கவும் விளம்பரம் கிடைக்கவும் இப்படி செய்கிறார். விமர்சனம் பண்ணலாம் ஆனால் அதற்கென்று ஒரு முறை இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் படத்தையே அவர் விமர்சிக்கும்போது முதல் 10 நிமிடங்களில் கழுவி ஊத்துவார். அதன் பிறகுதான் படம் நல்லாருக்கு என்பார். அவரை பெரிதுப்படுத்த வேண்டுமென்று இதை நான் பேசவில்லை. இறங்கி ஏதாவது செய்யணும் போல் தோன்றுகிறது. அவ்வளவு கோபம் எனக்கு” என பேசினார்.
கௌதம் மேனனின் இந்தப் பேச்சு ஒருசேர ஆதரவையும், எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது. விமர்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறாரா கௌதம் மேனன் என ஒருதரப்பினரும், ப்ளூ சட்டை மாறன் தன் விமர்சனத்தில் பக்குவத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று மறுதரப்பினரும் கூறிவருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க கௌதமின் பேச்சை அடுத்து ப்ளு சட்டை மாறன் தன் ட்விட்ட பக்கத்தில், சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ் மேனன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் - அடம்பிடித்த ராமராஜன்; ட்ராப் ஆன கரகாட்டக்காரன் 2
அதுமட்டுமின்றி பல்வேறு மீம்ஸ்களையும் கௌதம் மேனனுக்கு எதிராக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பாக கவனிக்கப்பட்டுவருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ