புதுடெல்லி: கடற்கரையில் ஆபாசமான வீடியோவை படமாக்கியதாக சர்ச்சைக்குரிய மாடல் மற்றும் நடிகையான பூனம் பாண்டே (Poonam Pandey) கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவாவின் சப்போலி அணையில் "ஆபாச வீடியோவை" படமாக்கியதாக கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு நடிகை மீது புகார் அளித்ததை அடுத்து, அவர் கைது (Poonam Pandey Arrestes) செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (ஆபாசமான) பிரிவின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சைக்குரிய இந்த வீடியோவை (Poonam Pandey Video) படமாக்கிய அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவா ஃபார்வர்ட் கட்சியின் மகளிர் பிரிவு கோவா காவல்துறையினரிடம் அளித்த புகாரின் ஒரு பகுதி பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது. "நடிகை பூனம் பாண்டே நடித்ததாகக் கூறப்படும் ஆபாச வீடியோ குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம், இது மாநிலத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்த வீடியோ கோவா பெண்கள் மீதான ஒரு வகையான தாக்குதல் மற்றும் கோவாவின் நற்பெயரை களங்கப்படுத்தியுள்ளது. இந்த ஆபாச வீடியோவின் படப்பிடிப்பு சபோலி அணை கனகோனாவில் செய்யப்பட்டுள்ளது, இது கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற கனகோனா மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது" எனப் புகார் தெரிவித்துள்ளனர். 


ALSO READ : பூனம் பாண்டேவின் பிகினி ஹோலி: வீடியோ பார்க்க!!


பூனம் சமீபத்தில் தனது காதலன் சாம் பம்பாயை (Sam Bombay) திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அவர்களது திருமண வாழ்க்கையில் ஒரு பிளவு ஏற்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது. தேனிலவுக்கு சென்ற போது பூனம் பாண்டேவை அவரது கணவர் அடித்ததாகக்க கூறி, சாம் பம்பாய்க்கு எதிராக புகார் அளித்தார். அதன்பிறகு போலீசாரும் சாமை கைது செய்தனர்.


ஆனால் பின்னர் பூனம் பாண்டே தனது கணவர் மீதான புகாரை வாபஸ் பெற்றார். அதன் பிறகு பூனத்தின் கணவருக்கும் ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், இப்போது இருவருக்கும் இடையில் உறவு நன்றாக இருக்கிறது. இது குறித்து பூனம் பாண்டேவேத் தெரிவித்தார். மேலும் சமூக ஊடகக் கணக்கில் சில போட்டுக்களையும் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | காதலனுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!