வேறுவழியின்றி ஓடிடி செல்கிறோம்: டக் ஜெகதீஷ் தயாரிப்பாளர் உருக்கம்
நானி நடிப்பில் உருவாகியிருக்கும் டக் ஜெகதீஷ் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு வந்துள்ள நிலையில் வேறு வழியின்றிதான் ஓடிடியில் வெளியிடுகிறோம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நானி, ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. நின்னுகோரி மற்றும் மஜிலி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு நானி – இயக்குனர் சிவா நிர்வானா கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது டக் ஜெகதீஷ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைமில் பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நானியின் டக் ஜெகதீஷ் படம் ஓடிடியில் வெளியாவதற்கு ஆந்திர திரையுலகில் கடும் எதிர்ப்பு வந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக டக் ஜெகதீஷ் படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். சைன் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தெலுங்கு ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறோம். மஜிலி படத்தின் வெற்றிக்கு பின்னர் நானியுடன் இணைந்து டக் ஜெகதீஷ் படத்தை தயாரித்தோம். இந்த படத்தினை ஒரு குழந்தையைப் போல இரண்டரை வருடங்கள் பார்த்துக்கொண்டும். கடந்த வருடம் டிசம்பர் மாதமே இப்படம் முடிந்துவிட்ட நிலையில், ஏப்ரல் மாதம் வெளியிட தயாராக இருந்தோம். ஆனால் கொரோனா அலையின் காரணமாக வெளியிட முடியவில்லை. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் படத்தையும் படத்தின் பற்றிய கதையின் விவரங்களையும் நீண்டநாட்கள் பத்திரமாக வைத்திருக்க முடியாது. இதன் காரணமாகவே ஓடிடியில் வெளியிட முடிவு செய்தோம். இது தொடர்பாக நானியிடம் பேசினோம். ஆனால் நானி இதற்கு சம்மதிக்கவில்லை. பின்பு நிலைமையை புரிந்து கொண்டு வேறுவழியின்றி ஓடிடியில் வெளியிட ஒத்துக் கொண்டார். டக் ஜெகதீஷ் பட இயக்குனரும் இதற்கு சம்மதித்தார். பெரிய திரையில் படங்களை பார்ப்பதற்கே நாங்களும் விரும்புகிறோம். எங்களின் நிலைமையை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நான்கு தினங்களுக்கு முன் டக் ஜெகதீஸ் ஓடிடி வெளியீடு குறித்து நானியும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், திரைப் படங்களை தியேட்டரில் பார்ப்பதே எனது முழு விருப்பம். ஆனால் தற்போதுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக தயாரிப்பாளர்கள் மிகவும் நஷ்டத்தில் உள்ள. எனவே கடைசி முடிவு தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆந்திராவில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டது. டக் ஜெகதீஷ் திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe