கோல்டன் விசா: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாக்களை வழங்குகிறது. 


ALSO READ | ’நாங்க மிஸ் பண்றோம்’ கண்ணீர்விட்டு அழுத ’83’ படக்குழு


நிபந்தனை - பலன்கள்


ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Visa) இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.  மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த விசாவை பெற  வேண்டுமானால் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதனை பூர்த்தி செய்து விண்ணப்பித்தால், அந்நாடு பரிசீலித்து, கோல்டன் விசாவை வழங்கும். 


இந்திய பிரபலங்கள்


இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின், பாடகி சித்ரா ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.


ALSO READ | இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேரும் ரஜினிகாந்த்?


தமிழ் பிரபலங்கள்


தமிழ் நடிகை திரிஷாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதன் மூலம் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற சிறப்பை பெற்றார். இப்போது, இயக்குநர், நடிகர் உள்ளிட்ட பன்முகத்திறமையைக் கொண்டிருக்கும் நடிகர் பார்த்தீபனுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR