இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேரும் ரஜினிகாந்த்?

இயக்குனர் நெல்சன் இயக்கும் புதிய படமொன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 10:00 PM IST
இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேரும் ரஜினிகாந்த்? title=

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குனராக தடம் பதித்தார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டார்க் காமெடி படமான 'டாக்டர்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

ALSO READ | நோ டேட்டிங்.. ஒன்லி தனிமை.. -பூனம் பாண்டே சொல்லும் ரகசியம்!

இவர் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து 'பீஸ்ட்' என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர்.   

rajini

இந்நிலையில் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த 'அண்ணாத்தே' படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது.  அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வரவேற்பை பெற்றது.

rajini

இப்படத்திற்கு பின்னர் ரஜினி அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், இவரை வைத்து அடுத்த  படங்களை இயக்கப்போவதாக பல  இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது.  அந்த வகையில் தற்போது  இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர்  ரஜினியின் கூட்டணியில்  புதிய படம் உருவாக போவதாக செய்திகள் வெளியானது.  அந்த வகையில் இந்த படம் நடிகர் 169-ரஜினிக்கு வது படமாக அமைய போகிறது.  மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கப்போகும் எஸ்.ஜே.சூர்யா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News