Cinema News: தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கின்றனர் சில நடிகர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் (Rocketry: The Nambi Effect) வாழ்க்கை வரலாற்றை தானே நடித்து தானே இயக்கியும் படமாக்கியுள்ளார் நடிகர் மாதவன் (R. Madhavan). சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதவனை அழைத்து இப்படத்தின் கதை பற்றி கேட்டறிந்தார். 


மிஸ்கின் இயக்கத்தில் விஷால் (Actor Vishal) நடித்த துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்கு பிறகு, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டனர். படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மிஷ்கினுக்கு விஷாலுக்கும் ஏற்பட்ட மோதலால் மிஸ்கின் அப்படத்தை விட்டு வெளியேறினார். பின்பு துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2) படத்தை தானே இயக்கி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார் விஷால். 


நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் கடல் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார் அரவிந்த்சாமி (Actor Arvind Swamy). தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்ததன் பின் கோலிவுட்டில் பிசியான ஹீரோவாக மாறினார் அரவிந்த்சாமி. இருப்பினும் தற்போது இந்த வாரம் நெட்பிலிக்சில் ரிலீசாக இருக்கும் "நவரசா" (Navarasa) என்ற தொடரில் ஒரு பகுதியை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ரித்விகா, ரமேஷ் திலக் போன்றோர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.


ALSO READ | WATCH: "ராக்கெட்ரி" படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ட்ரைலர்


இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி பின் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி (Vijay Antony) தற்போது பிச்சைக்காரன் 2 (Pichaikkaran 2) படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.


முன்னதாக தனுஷ் (Dhanush), சிலம்பரசன் (Silambarasan) போன்ற முன்னணி நடிகர்களும் இயக்குனர்களாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர்.


ALSO READ | Navarasa trailer: வெளியானது மணிரத்னத்தின் நவரசா ட்ரெய்லர்


ALSO READ | #HBDVijayAntony: பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகும் விஜய் ஆண்டனி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR