ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61ஆவது படத்தில் நடித்துவருகிறார். இரட்டை வேடங்களில் அவர் நடிப்பதாலும், க்ரைம் பாணியில் கதை உருவாக இருப்பதாலும் வலிமையில் விட்டதை இருவரும் பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் தபு உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கனும் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின்றன.


மேலும் படிக்க | Route To EL - DORADO: வெளியானது கேஜிஎஃப் 2 மேக்கிங் வீடியோ


இந்நிலையில் ஏகே 61ல் நடிகரும், கௌதம் மேனனிடம் உதவியாளராக இருந்தவருமான வீரா நடிக்கவிருக்கிறார் என தெரிகிறது. இவர் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.



இதனையடுத்து நகை கடை கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராஜதந்திரம் படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வீரா பலரால் அறியப்பட்டவர் ஆனார். 


மேலும் படிக்க | பணக்கஷ்டத்தில் தவித்த ஸ்ருதிஹாசன் அம்மா


தற்போது க்ரைமை மையப்படுத்தி எடுக்கப்படும் ஏகே 61லும் இவர் இணைந்திருப்பதாக கூறப்படுவதால், படத்தில் பக்கா மாஸ் பேக்கேஜ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe