பணக்கஷ்டத்தில் தவித்த ஸ்ருதிஹாசன் அம்மா

ஸ்ருதிஹாசனின் அம்மாவான சரிகா கொரோனா காலத்தில் பணக்கஷ்டத்தால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 11, 2022, 04:09 PM IST
பணக்கஷ்டத்தில் தவித்த ஸ்ருதிஹாசன் அம்மா   title=

நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயுமான சரிகா லேட்டஸ்டாக கொடுத்திருக்கும் பேட்டி சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. லாக்டவுன் காலத்தில் பணக்கஷ்டத்தால் அவதிப்பட்டதாக கூறியுள்ள சரிகா, அதற்காக நடிப்புக்கு மீண்டும் திரும்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், கொரோனா காலத்தில் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் நடிக்க சென்றதாக கூறியுள்ளார். அப்போது, 3 ஆயிரத்துக்கு குறைவான ஊதியம் மட்டுமே கிடைத்ததாக தெரிவித்துள்ள அவர், அதனை வைத்து நாட்களை கடத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!

"கொரோனா காலத்தில் மிகவும் அவதிப்பட்டேன். அந்த நேரத்தில் என்னிடம் பணம் இல்லை. என்னசெய்வதென்று எனக்கு தெரியவில்லை. இதனால், கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன். சின்ன ரோல்களில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியம் கிடைக்கும். அதனை வைத்து கடினமான நாட்களை கடத்தினேன். லாக்டவுன் நேரத்தில் கையில் வைத்திருந்த பணம் எல்லாம் காலியாகிவிட்டது. இதனால், உழைப்பு மட்டுமே தீர்வு என நடிப்புக்கு திரும்பினேன். சுமார் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிப்புக்கு திரும்பியுள்ளேன். 

ஓராண்டு ரெஸ்ட் எடுத்துவிட்டு படங்களில் நடிக்கலாம் என இருந்தேன். ஆனால், 5 ஆண்டுகள் ஓடிவிட்டது" என சரிகா கூறியுள்ளார். சரிகா தற்போது நடித்துள்ள மார்டன் லவ் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கு  முன்பு 2016 ஆம் ஆண்டு காத்ரினா கைஃப் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியான பார் பார் தேகோ படத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகின் உட்சபட்ச நட்சத்திரமாக இருக்கும் கமல்ஹாசனின் மனைவி பணத்துக்கு கஷ்டப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிகைகளாக உள்ளனர். அவர்கள் மிகப்பெரும் தொகையில் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Route To EL - DORADO: வெளியானது கேஜிஎஃப் 2 மேக்கிங் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News