ஒரு சில நேரங்களில் யதார்த்தமாக இரட்டை அர்த்தங்களில் பேசி தானாகவே சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு மன்னிப்பு கேட்டு கிராமத்து எளிமையை கண்முன் கொண்டு வந்துவிடுவார் ஜிபி முத்து.  குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்த ஜி.பி.முத்துவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து பணம், புகழ் கிடைக்கும் போதும் தனது பழசை மறக்காமல், இன்னமும் தன்னுடைய வெகுளித்தனத்துடன் இருப்பது தான் இவரது பலமாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாஜக பகை கட்சி கிடையாது ; ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு



இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாகவும் கலந்து கொண்டு வரும் ஜிபி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.ஜி பி முத்துக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்தோ ஜி.பி முத்து தரப்பில் இருந்தோ எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.



பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து சில தினங்களிலேயே மிகவும் பிரபலமானார்.  இவருக்கும் கமலுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் இணையத்தில் வைரல் ஆனது.  இந்நிலையில், தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகினார்.  தற்போது பல முக்கியமான படங்களில் நடித்து வருகிறார் ஜிபி முத்து.


மேலும் படிக்க | 26 வயது நடிகை உயிரிழப்பு... துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்!