Actor Vijay April 12 Movies: தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நடிகர்களுள் ஒருவரும், முதன்மையானவருமாக நடிகர் விஜய் உள்ளார். சுமார் படங்கள் முதல் மெகா சூப்பர் ஹிட் படங்கள் வரை விஜய் அவரது திரைப்பட வரலாற்றில் பெரும் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளார் என கூறலாம். சமீப காலங்களில் விஜய் நடிக்கும் படங்களின் வசூல்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன.
அவரின் மிகவும் விமர்சிக்கப்பட்ட படத்திற்கும் வசூலில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது என கோலிவுட் வட்டாரங்கள் கூறும் அளவிற்கு விஜய் தனது ரசிகப்படையினரை கட்டமைத்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவரின் தனிப்பட்ட உழைப்பையும், திறமையையும் கண்டு வியப்படையாதவர்கள் யாருமில்லை எனலாம்.
விஜய் ஆரம்பத்தில், காதல் நாயகனாக அறியப்பட்டாலும், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் மூலம், காதல் மனங்களை மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் அதிகமாக ஈர்த்தார். தொடர்ந்து, திருமலை மூலம் மாஸ் அவதாரம் எடுத்த அவருக்கு, கில்லி திரைப்படம் பெறும் திருப்புமுனையாக அமைந்தது. மாஸ் நாயகனாக அவர் போக்கிரி படத்தில் உச்சம் தொட்டார் எனலாம். அதன்பின், சில ஆண்டுகள் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை.
மேலும் படிக்க | தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல் முறை! பொன்னியின் செல்வன் 2 செய்த சாதனை!
2012ஆம் ஆண்டில் வெளிவந்த துப்பாக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் கவனத்தை பெற அந்த படம் விஜய்யின் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படமாக அமைந்தது. துப்பாக்கி கொடுத்து பெரும் நம்பிக்கை 10 ஆண்டுகள் கடந்து தற்போதும் அது கொடுத்த நம்பிக்கையை தக்கவைத்து வருகிறார்.
தற்போது, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது வெளியாக உள்ள படங்களில், லியோவிற்கு உண்டான எதிர்பார்ப்பு தற்போது வரை வேறு படங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமாகும். அந்த வகையில், வெற்றி பாதையில் சென்றுகொண்டிருக்கும் விஜய்க்கு, ஏப். 12ஆம் தேதியான இன்று மிகவும் சிறப்பான நாள் என்றே கூறலாம்.
அதாவது, வெவ்வேறு ஆண்டுகளில் விஜய் நடித்த மூன்று படங்கள், ஏப்.12ஆம் தேதிதான் ரிலீஸாகி உள்ளது. மாண்புமிகு மாணவன், பத்ரி, தமிழன் ஆகிய விஜய்யின் படங்கள் ஏப். 12ஆம் தேதிதான் வெளியாகியுள்ளது.
மாண்புமிகு மாணவன் (1996)
1992ஆம் ஆண்டில், நாளைய தீர்ப்பில் நாயகனாக அறிமுகமான விஜய்யின், 11ஆவது படம்தான் மாண்புமிகு மாணவன். இந்த திரைப்படத்தையும் அவரின் தந்தையும், இயக்குநனருமான எஸ்.ஏ. சந்திரசேகர்தான் இயக்கியிருந்தார்.
ஸ்வப்னா பெடி, மணிவண்ணன், விஜயகுமார் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர், தேவா இசையமைத்திருந்தார். படம் ஓரளவுக்கு ஹிட்டானது என கூறப்படுகிறது. படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பத்ரி (2001)
விஜய்யின் 29ஆவது படமான பத்ரி, 2001ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பி. ஏ. அருண் பிரசாத் என்ற அறிமுக இயக்குநரால் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, இரமண கோகுலா என்பவர் இசையமைத்திருந்தார். படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்.
இளைஞர்களிடம் விஜய்யை கொண்டு சேர்த்த படங்களில், பத்ரி படமும் ஒன்றாகும். இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு ஜோடிகள் என்றாலும், பூமிகா அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருப்பார். இப்படத்தின், நகைச்சுவை காட்சிகளையும் பலராலும் மறக்க முடியாது. இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
தமிழன் (2022)
சமூக பொறுப்புள்ள கதாபாத்திரத்தில் விஜய் நடித்து பெரும் ஹிட் அடித்த படம் தமிழன். எஸ்.ஏ. சந்திரசேகரின் கதையில் இத்திரைப்படம் உருவானது. படத்தில், பிரியங்கா சோப்ரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நாசர், ரேவதி,விவேக் என நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்தின் மூலம், இசையமைப்பாளர் டி. இமான் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்மூலம், தமிழன் படம் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | யாத்திசை படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியா? இயக்குனர் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ