ஜிபி முத்து திடீர் ஆக்ரோஷம்; பதிலுக்கு மல்லுக்கட்டிய பிக்பாஸ் போட்டியாளர்
பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து திடீரென ஆக்ரோஷமாகி விக்ரமனுடன் சண்டையிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து சென்றிருப்பதால், அலப்பறைகளுக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்புடன் நாள்தோறும் தவறாமல் பிக்பாஸ் தமிழ் சீசன் 6-ஐ பார்த்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் பிக்பாஸ் விதவிதமான டாஸ்குகள் கொடுத்து சுவாரஸ்யத்தை கூட்டினாலும்ர, போட்டியாளர்களுக்கு மத்தியில் எந்தவித சலசலப்பும் ஏற்படாமல் சீரான போய்க்கொண்டிருந்தது. என்னடா, இப்படியே போனால், எப்படி சுவாரஸ்யம் இருக்கிப்போகிறது என நினைத்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோடு விருந்தாக அமைந்துவிட்டது.
மேலும் படிக்க | பிக்பாஸ்-6 நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறும் ஜி.பி.முத்து?
தனலட்சுமி - அசல் கோலார் இடையே திடீரென சண்டை மூண்டது. கூலாக இருப்பதுபோல் காட்டிக் கொள்ளும் அசல் கோலார், மற்ற போட்டியாளர்களை இலகுவாக ரியாக்ஷன் கொடுத்து கேலி கிண்டல் அடித்துவிடுகிறார். ஆனால், அது தனலட்சுமியிடம் எடுபடவில்லை. அவர், அசல் கோலாரிடம் நேருக்கு நேர் சண்டைக்கு சென்றுவிட்டார். என்ன எப்போது பார்த்தாலும் பெரியம்மா.. ஆன்டி..வா.. போ-னு எல்லாம் பேசுற, நீ மரியாதை எதிர்பார்க்குற மாதிரி எனக்கும் மரியாதை கொடுன்னு, ஆவேசமாக பேச பிக்பாஸ் வீடே பரபரப்பானது.
பதிலுக்கு அசல் கோலாரும், தனலட்சுமியிடம் பந்தாவாக சண்டை செய்து கெத்துபோட நினைத்தார். ஆனால், தனலட்சுமி தான் நினைத்ததை அவரிடம் ஆவேச வார்த்தையால் கொட்டித் தீர்த்தார். இந்த சண்டை பிக்பாஸ் வீட்டில் மற்ற சண்டைகளுக்கு ஆரம்ப புள்ளியாக போனது. தனலட்சுமிக்கு என்ன நடந்தது என கேட்க சென்ற விக்ரமனை, அசீம் தடுக்க, அங்கு வந்த ஜிபி முத்துவும் பிரதர் நீங்க வெளியே போய் பேசுங்க என சொன்னார். இதனால் சுளீர் என கோபத்துக்கு சென்ற விக்ரமன், என்ன ஆளாளுக்கு வந்து என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க, நான் என்னனு கேட்க வந்தது தப்பா? எகிற ஆரம்பித்தார்.
பதிலுக்கு ஜிபி முத்துவும் சண்டைக்கு போக இன்னொரு சண்டை உருவானது. உடனே ஜிபி முத்து கோஷ்டி சேர்த்த ஆரம்பித்துவிட்டார். வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் சென்று விக்ரமன் பேச்சை யாரும் கேட்காதீங்க, அவரு பேசும்போது அமைதியாக போய்விடுங்கள் என சொல்கிறார். இது பிக்பாஸ் வீட்டில் புது புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஜிபி முத்துவை கொஞ்சம் அமைதியா இருங்க பாஸ் என வெளியில் இருக்கும் அவரது ரசிகர்கள் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவரது காதுக்கு எப்படியாவது போகுமா? என்றால் தெரியவில்லை.
மேலும் படிக்க | கதையை எப்போ சார் சொல்வீங்க?... உறுதியானது சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு கூட்டணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ