இசையமைப்பாளராக திரையுலகில் நுழைந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராகவும் உயர்ந்துள்ளார். பல படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற இவர் கடைசியாக ‘அடியே’ படத்தில் நடித்தார். விக்னேஷ் கார்த்திக் இயக்கிய இப்படம் தற்போது சோனி லைவில் ஒளிபரப்பாகி வருகிறது. கௌரி கிஷன், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதுமகேஷ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகை திவ்யா பாரதி பேச்சுலர் படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.  2021ம் ஆண்டு வெளியான இந்த படம் இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பேச்சுலர் படத்தின் எதிர்பாராத வெற்றிக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் தற்போது புதிய படத்தில் இணைந்துள்ளது.  தற்போது இருவரும் ஜிவி பிரகாஷின் 25வது படத்திற்காக மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | “விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி!



நடிகர் ஜிவி பிரகாஷ் இப்போது கமல் பிரகாஷ் இயக்கும் தனது 25 வது படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படத்தில் தான் திவ்யா பாரதி முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஜி.வி பிரகாஷ் தயாரிக்கவுள்ளார். மேலும் அவருடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் பட குழுவினர் பற்றிய விவரங்கள் இன்று வெளியாக உள்ளது.  ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே இயக்குனர் கமல் பிரகாஷுடன் இணைந்து ‘காதலிகா யாரும் இல்லே’ என்ற பெயரில் நடித்து இருந்தார்.  ஆனால் இந்த படம் தற்போது வரை வெளியாகவில்லை. நடிகராக ஜி.வி.பிரகாஷின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.  மேலும், இன்று மாலை 6 மணிக்கு கமல்ஹாசன் இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளார். 


இந்த படத்தை தவிர ஜிவி பிரகாஷ் கைவசம் பல படங்கள் உள்ளன.  ஜிவி நடிப்பில், இடிமுழக்கம், 13, கள்வன் மற்றும் அன்பே ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.  இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் தனது 100வது படத்திற்கு தயாராகி வருகிறார், மேலும் சூர்யாவின் அடுத்த படமான #சூர்யா43 படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர்.  இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இப்போது கோலிவுட்டின் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, விக்ரமின் ‘தங்கலான்’, சூர்யாவின் ‘வாடிவாசல்’, கார்த்தியின் ‘ஜப்பான்’, ஜெயம் ரவியின் ‘சைரன்’ ஆகிய படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும் பல புதிய அறிவிப்புகளும் வரவுள்ளன.  மறுபுறம், நடிகர் கதிருடன் இணைந்து திவ்ய பாரதி ஒரு புதிய தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.


மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ