சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் சேதுபதி அவர்களால் அறிவிக்கப்பட உள்ளது. ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இரண்டாவது படமான இப்படத்திற்கு 'இடி முழக்கம்' என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் சேதுபதியை (Vijay Sethupathi) வைத்து தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மா மனிதன் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி (Seenu Ramasamy) தற்போது ஜிவி பிரகாசை (GV Prakash) வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. முழுக்க சென்டிமெண்ட் கதைகளாகவே எடுத்து வந்த சீனுராமசாமி இந்த படத்தில் ஆக்சனை கையில் எடுத்துள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு புதிய பரிமாணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 



 


 



 


ALSO READ | தனுஷ் ஒரு நடிகர் மட்டுமல்ல.. D43 படம் குறித்து மனம் திறந்த கார்த்திக் நரேன்


நடிப்பு, இசை என இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். அவர் நடிப்பில் தற்போது Bachelor என்ற திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. 2019ம் ஆண்டு வெளிவர வேண்டிய ஐயங்கரன் திரைப்படமும் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ஜெயில், அடங்காதே திரைப்படங்களும் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் BMW பைக்கில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் ஜிவி பிரகாஷ். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு என்ன பைக் பிடிக்கும் என்று கமெண்டில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜிவி, நமக்கு எப்பவுமே RX100 தான் என்று பதிலளித்திருந்தார். ஜிவி பிரகாஷின் இந்த பதில் RX 100 பைக் லவ்வர்ஸ் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | விஜய் சேதுபதியின் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR