மெரினா படத்தில் அறிமுகமாகி இன்று தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் மாவீரன் ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகவுள்ளன. இந்த நிலையில், அவர் நடிக்கும் 21ஆவது படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக முன்னர் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இணையவுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


எஸ்.கே 21:


 


கமல் ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இதுவரை பல முன்னணி ஹீரோக்களின் படங்களைய தயாரித்துள்ளது. கடைசியாக, சிம்புவின் 48ஆவது படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தற்போது தமிழ் திரையுலகின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறியிருந்தது. இதையடுத்து, இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள அந்த முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா? 


 


 



 


மேலும் படிக்க | அவமானத்தில் ஷக்தி.. பூஜாவுக்கு ஷாக்.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ


 


 


ஜி.வி.பிரகாஷ் குமார்:


 


தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குநர்களின் பல படங்களுக்கு இசையமைத்து பாடல்களை ஹிட் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரும், சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தில் இணையவுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ட்வீட்ட வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. 


 


முதல் முறையாக இணையும் கூட்டணி..


 


சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ் குமார் முதன் முறையாக இந்த படத்திற்காக இணைகின்றனர். இதனால், இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அது மட்டுமன்றி, சமீப காலங்களில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள அனைத்து படங்களின் பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்துள்ளன. தமிழ் திரையுலகில் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி இசையமைப்பாளராகவும் கலக்கி வருகிறார். ஜப்பான், கேப்டன் மில்லர், தங்கலான் என பல முக்கிய ஹீரோக்களின் படங்கள் இவர் கைவசம் உள்ளன. இந்த லிஸடில் தற்போது சிவகார்த்திகேயனின் 21ஆவது படமும் இணைந்துள்ளது. 


 


ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!


 


சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனம் இயக்க இருக்கிறது என்ற செய்தி வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் அந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, படத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இணைய இருக்கிறார் என்ற செய்தியை கேட்டவுடன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத்திடம்தான் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது எனவும் ஆனால் கால்ஷீட் இல்லாததால் அவரால் இந்த படத்தில் இணைய முடியவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது. 


 


காஷ்மீரில் படப்பிடிப்பு:


 


தமிழில் கெளதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரயசாமி சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தையும் இயக்கிவருகிறார். மாவீரன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கைய்யோடு சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதன் படப்பிடிப்பு, காஷ்மீர் உள்பட பல முக்கிய இடங்களில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 


மேலும் படிக்க | பத்திரிகை சுதந்திர தினம்: பத்திரிகையாளர்களாக கலக்கிய நடிகர்களும் அவர்களது படங்களும


 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ