அவமானத்தில் ஷக்தி.. பூஜாவுக்கு ஷாக்.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : May 3, 2023, 11:53 AM IST
  • திருமணத்தை நிறுத்துவதற்காக நீதிமணி மண்டபத்திற்கு விரைகிறான்.
  • பூஜாவின் தோழிகளால் ஷக்தி அவமானப்படுத்தப்படுகிறாள்.
  • இன்றைய எபிசோட் பல திருப்பங்களைக் கொண்டுள்ளது.
அவமானத்தில் ஷக்தி.. பூஜாவுக்கு ஷாக்.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ title=

மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்று நடக்கும் கதைதான் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வோமா? 

 

இதுவரை நடந்தது..

 

லெட்டர் எழுதி வைத்துவிட்டு காணமல் போன சரண்யாவை கண்டுபிடித்து அவளுக்கு புத்திமதி கூறி மண்டபத்திற்கு அழைத்து வருகிறாள் ஷக்தி. அவர்கள் வரும் வழியில், நீதிமணி, யமுனா மற்றும் துர்காவும் வருகிறார்கள். நீதிமணி கல்யாணத்தை எப்படியும் நான் நிறுத்தி காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டபடி வருகிறான். இங்கே மண்டபத்தில் பூஜா சக்தியை ஏன் இவ்வளவு நேரம் காணவில்லை கல்யாணத்தை நிறுத்த அவள் ஏதோ ஒரு திட்டம் போடுகிறாள் என நினைத்து சரண்யாவின், ரூமில் இருந்த கடிதத்தை எடுத்து படித்து விடுகிறாள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க. 

 

மேலும் படிக்க | காணாமல் போன சரண்யா..பதறும் சக்தி..மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் செம ட்விஸ்ட்

 

இன்று நடக்கவிருப்பது:

 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் பூஜா கையில் லெட்டரை வைத்திருக்க ரங்கநாயகி சீக்கிரம் தயாராகுமாறு கூறிககொண்டிருக்கிறாள். அப்போது, அங்கே வரும் சக்தி லெட்டரை பார்த்து பூஜாவிடம் இருந்து சக்தி அந்த லெட்டரை வாங்குகிறாள். இதை பார்த்து என்ன லெட்டர் அது என்று ரங்கநாயகி கேட்க மளிகை லிஸ்ட் என்று சொல்லி சக்தி சமாளிக்கிறாள்.  அடுத்ததாக ரங்கநாயகி சென்றதும், பூஜா சக்தியின் கையில் உள்ள கடிதத்தை பிடுங்க அதற்குள்  யாரோ வர உடனே பூஜா லெட்டரை பார்க்காமல் சென்று விடுகிறாள். அதனை தொடர்ந்து சாப்பிடும் இடத்தில் பூஜாவின் தோழிகள் சக்தியின் மீது சாப்பாட்டை கொட்டி அவமானப்படுத்துகிறார்கள். 

 

திருமணத்தை நிறுத்த வரும் நீதிமணி:

 

மறுபக்கம் கல்யாணத்தை நிறுத்துவதற்காக காரில் வந்து கொண்டிருந்த நீதிமணியின் கார் வழியில் பஞ்சர் ஆகி நின்றுவிடுகிறது.  டிரைவர் சரி செய்ய தாமதமாகும் என்று கூற, ,டிரைவரை திட்டிவிட்டு நீதி மணி யமுனா துர்கா மூவரும் நடந்தே கல்யாண மண்டபத்திற்கு விரைகிறார்கள். கல்யாண மண்டபத்தில் பூஜாவை ஒரு அறையில் ரோகித் சந்திக்கிறான். பூஜா, அவனை இன்னும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்று திட்டுகிறாள். பணம் தான் வாழ்க்கையில் முக்கியம்  இது மாதிரி தேடி வராதே என்று எச்சரிக்கை செய்து பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கே வெற்றி வருகிறான்.

 

திகைத்து நிற்கும் பூஜா:

 

வெற்றியை பார்த்த பூஜா திகைத்து நிற்க, வெற்றியும் ரோகித்தும் பேசிக் கொள்கிறார்கள்.  ரோகித் தன் செல்போனில் பூஜாவையும் வெற்றியையும் போட்டோ எடுக்க வேண்டும் என்று சொல்ல வெற்றியும் பூஜாவும் நிற்க ரோஹித் போட்டோ எடுக்கிறான். வெற்றி போனதும் பூஜாவிடம் பூஜாவை மட்டும் எடுத்த போட்டோவை காட்டுகிறான், ரோகித்  பிரச்சனை செய்து கல்யாணத்தை நிறுத்தி விடுவானோ  என அதிர்ச்சியில் உறைகிறாள் பூஜா.

 

இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

 

மேலும் படிக்க| அமுதாவும் அன்னலட்சுமியும்: பழனிக்கு ஷாக் கொடுத்த செந்தில், வெளிவந்த அமுதாவின் திட்டம

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News