Kollywood News: தமிழ் திரைப்பட நடிகர் ஹரீஷ் கல்யாண் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தன்னைப் பற்றிய மற்றும் தன் படங்கள் பற்றிய புதுப்பிப்புகளை அவ்வப்போது தன் ரசிகரிகளிடம் அவர் பகிர்ந்துகொள்வது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது படமான 'ஓ மணப்பெண்ணே' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது. 'ஓ மணப்பெண்ணே', 2016 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு வெற்றிப் படமான 'பெல்லி சூப்புலு'வின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். 


இப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய்யின் முன்னாள் இணை இயக்குனரான கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படம் இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


ஹரீஷ் கல்யாணின் (Harish Kalyan) 31 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் ஒரு சிறிய வீடியோ மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்தார். மாலையில் 6 மணிக்கு ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என அவர் தெரிவித்தார். ஒரு மிகப்பெரிய அப்டேட்டுக்கான எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பில் இருந்தனர். 



ALSO READ: Doctor: OTT ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்னின் டாக்டர் 


ஹரிஷ் ட்விட்டரில், தனது வரவிருக்கும் திரைப்படமான 'ஓ மணப்பெண்ணே'-வின் அடுத்த பாடல்' போதை கணமே' விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். 


விஷால் சந்திரசேகர் இசையமைத்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலை 'ராக்ஸ்டார்' அனிருத் (Anirudh) பாடியுள்ளார்.


ஹரீஷ் கல்யானின் ட்வீட் உங்கள் பார்வைக்கு: 



அண்மையில் நடந்த ஒரு கேள்வி பதில் உரையாடலில் பேசிய பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar), 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் "ஒருவருக்கொருவர் இடையில் இருக்கும் மிகுந்த அன்பால் உருவாக்கப்பட்டுள்ளது" என்றும், "நாங்களும் படத்தையும் அன்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறோம்" என்றும் கூறினார்.


ALSO READ: நயன்தாராவுடன் திருமணம்; விக்னேஷ் சிவனின் ஷாக் பதில் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR