ஹெவி கிராஃபிக்ஸில் உருவாகும் ‘க்ரிஷ்-4’: வேற லெவல் அப்டேட்!
நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘க்ரிஷ்- 4’ படம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘க்ரிஷ்- 4’ படம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஹிரித்திக் ரோஷன், விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கில் தற்போது நடித்துவருகிறார். புஷ்கர் காயத்ரி இயக்கிய விக்ரம் வேதாவில் நடிகர் மாதவன் நடித்த கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க, விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கிறார். தமிழில் நல்ல கவனம் பெற்ற இப்படம் இந்தி ரீமேக்கிலும் நல்ல ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கர்- காயத்ரி இயக்கும் இப்படத்தில் சயிப் அலிகானுக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ‘க்ரிஷ்’ படத்தின் அடுத்த சீக்வலான ‘க்ரிஷ்- 4’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதாநாயகிகூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது. சூப்பர்மேன் ஜானரில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘க்ரிஷ்’ திரைப்படம் இந்திய அளவில் நல்ல கவனத்தைப் பெற்றது. இதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகின.
மேலும் படிக்க | விக்ரம் வேதா ஹிந்தியில் பர்ஸ்ட் லுக் வெளியீடு - ரசிகர்களின் ரியாக்ஷன்
இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில்தான் தற்போது 4ஆவது படமாக இது வரவுள்ளது. ஹிரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான பொருட்செலவில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் எடுக்கப்படவுள்ள இப்படம் மிரட்டலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிரித்திக் ரோஷனுக்கு ரசிகர் வட்டம் உள்ளதால் இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்ரம் வேதாவில் நடித்துவரும் ஹிரித்திக், இப்படத்தையடுத்து தீபிகா படுகோனுடன் நடிக்கவுள்ள ‘ஃபைட்டர்’ படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR