Remake Movie: லேட்டஸ்ட் தென்னிந்தியத் திரைப்படங்களின் பாலிவுட் ரீமேக்! மாஸ்டர் முதல் கைதி வரை...

தென்னிந்தியாவில் வெற்றி பெறும் திரைப்படங்களின் ரீமேக் பெரும்பாலும் பாலிவுட்டில் வெற்றியடைகின்றன. அது கஜினியாக இருந்தாலும் சரி... ரஜினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2022, 02:33 PM IST
  • கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும் திரைப்படங்கள்
  • மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான்!
  • விக்ரம் வேதா ரீமேக் எப்போது வெளியாகும்?
Remake Movie: லேட்டஸ்ட் தென்னிந்தியத் திரைப்படங்களின் பாலிவுட் ரீமேக்! மாஸ்டர் முதல் கைதி வரை...  title=

'மாஸ்டர்,'  முதல் 'அன்னியன்' என தென்னிந்தியத் திரைப்படங்களில் பல பாலிவுட்டில்  அதிக அளவில் ரீமேக் ஆகின்றன. எண்ணற்ற ரீமேக்குகளுக்கு மத்தியில், சமீபத்திய பாலிவுட் ரீமேக்குகள் இவை.

பாலிவுட்டில் ரீமேக்குகள் பெரும்பாலும் பாதுகாப்பான திரைப்படங்களில் கருதப்படுகின்றன, தென்னிந்தியாவில் வெற்றி பெறும் திரைப்படங்களின் ரீமேக் பெரும்பாலும் பாலிவுட்டில் வெற்றியடைகின்றன. அது கஜினியாக இருந்தாலும் சரி... ரஜினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி...

இந்தியில் அவை தமிழ், தெலுங்கு, கன்னட பிளாக்பஸ்டர்களால் ஈர்க்கப்பட்டு அல்லது ரீமேக் செய்யப்பட்டன. எனவே, வரவிருக்கும் தென்னிந்தியத் திரைப்படங்களின் ரீமேக்களுடன் இதோ.

 'அந்நியன்'

இயக்குனர் ஷங்கர் தனது 2005 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் 'அன்னியன்' (இந்தியில் 'அபரிசித்') திரைப்படத்தை இந்தியில் எடுக்கிறார். பிரபல நடிகர் ரன்வீர் சிங்குடன் கைகோரிக்கும் ஷங்கரின் மிகவும் பிரபலமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம்.  

MOVIE

மாஸ்டர் (Master)

தொற்றுநோய்களின் போது பல சாதனைகளை முறியடித்த 'மாஸ்டர்' திரைப்படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த 2020 ஆம் ஆண்டின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படம். இந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.  

'கைதி' (Kaithi)
கார்த்திக் நடித்த 2019ஆம் ஆண்டின் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் கார்த்திக் சிவகுமாரின் டில்லி கதாபாத்திரத்தில்  அஜய் தேவ்கன் நடிக்கிறார், தனது மகளை சந்திக்க போராடும் ஒரு கைதியின் வாழ்க்கையை காட்டும் இந்த திரைப்படம் தமிழில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.  

MOVIE

'விக்ரம் வேதா'

'விக்ரமாதித்யனும் வேதாளமும்' என்ற பிரபலமான புராணக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் விக்ரம்-வேதா. ஆர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த 2017 இன் அதிரடி திரைப்படத்தின் ரீமேக் தற்போது தயாரிப்பில் உள்ளது, விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் நடிக்கிறார். 

விக்ரம் வேதா (Vikram Vedha) 

'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுன் ஹிந்தி திரைப்பட உலகிலும் கவனம் பெற்றுள்ளார்.. 2020 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி, குடும்ப நகைச்சுவை திரைப்படமான 'ஆலா வைகுந்தபுரமுலூ' ரீமேக் ஆகிறது.

 கார்த்திக் ஆர்யன், கிருதி சனோனின் நடிப்பில் ரோஹித் தவான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு நவம்பரில் வெளியாக உள்ளது.  

ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!

டிரைவிங் லைசன்ஸ் (Driving License)

பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த 2019 இன் நகைச்சுவை திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மியுடன் அதன் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான 'செல்ஃபி'யாக அரிதாரம் பூசவுள்ளது. 'குட் நியூஸ்' இயக்குனர் ராஜ் மேத்தா இப்படத்தை இயக்கவுள்ளார், இந்த ஹிந்தி திரைப்படம் அடுத்த ஆண்டு 2023 இல் வெளியிடப்படும்.

'ஹிட்' (HIT)
2020களின் புலனாய்வு திரைப்படங்களில் ஹிட் அடித்த 'HIT'   ஹிந்தியில் ராஜ்குமார் ராவ், சன்யா மல்ஹோத்ரா கூட்டணியில் ரீமேக் செய்யப்படுகிறது.  

ALSO READ | மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்கள் சொல்லும் ஸ்ருதி கமலஹாசன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News