இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ஆரி "எல்லாம் மேல  இருக்குறவன் பாத்துப்பான்" என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 


இந்த படத்தில் ஷாஷ்வி பாலா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கவிராஜ் இயக்குகிறார். மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்து வருகிறார்.  


இந்நிலையில்,  இப்படத்தின் டீசரை நேற்று நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டீசரில் ஏலியன்கள் தொழில்நுட்பத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.