கடந்த ஆண்டு இந்திய அளவில் நிறைய திரைப்படங்கள் வெளியானது.  அதில் பல சின்ன படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.  இந்த வாரம் குறிப்பிடத்தக்க படங்கள் என்று திரையரங்குகளில் வெளியாகவில்லை.  ஆனால் சில எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது.  நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் - நடிகர் விஷால்!


ஹாய் நன்னா (Hi Nanna)


ஷௌர்யுவின் இயக்கத்தில் வெளியான படம் ஹாய் நன்னா. நானி மற்றும் மிருணால் தாக்கூர் நடித்த உணர்வுபூர்வமான காதல் படம் இது வாகும். இந்த வாரம் Netflixல் இந்த படம் வெளியாகிறது.  படம் விராஜ் (நானி) மற்றும் வர்ஷா (மிருணாள்) இடையேயான காதல் கதையையும், நோய்வாய்ப்பட்ட தங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு அவர்கள் எடுக்கும் போராட்டத்தை பற்றியும் பேசுகிறது.  



தேஜஸ் (Tejas)


கங்கனா ரனாவத் விமானப்படை அதிகாரியான தேஜஸ் கில் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் எதிரிகளின் முன்னணியில் இருந்து இந்திய உளவாளியை மீட்கும் ஆபத்தான பணியை மேற்கொள்கிறார். சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்த தேசபக்தி திரைப்படம் அக்டோபர் 27, 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது.  படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கங்கனா ரனாவத், அன்ஷுல் சவுகான், வருண் மித்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.



க்யூபிகல்ஸ் சீசன் 3 (Cubicles Season 3)


சைதன்யா இயக்கும் இந்த புதிய தொடரில் நேர்மையான தகவல் தொழில்நுட்ப ஊழியர் பியூஷ் பிரஜாபதி மீண்டும் வந்துள்ளார். இப்போது பியூஷ் ஒரு டீம் லீட் மற்றும் புதிய தலைவராக தனது குழுவில் இருந்த நண்பர்களை ஆர்டர் செய்ய வேண்டும். இந்த வெப் சீரிஸில் அபிஷேக் சவுகான், பத்ரி சவான், ஆயுஷி குப்தா, நிகேதன் ஷர்மா, கேதகி குல்கர்னி, நிமித் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.  சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது.


90s (ETV Win)


தெலுங்கு வெப் சீரிஸ் ஆனா 90s ஜனவரி 5 அன்று Etv Winல் ஓடிடியில் வெளியாக உள்ளது.  இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவாஜி, இந்தத் தொடர் சிறந்த பொழுது போக்காகவும், ஒவ்வொரு 90's குழந்தைகளுடனும் இணைக்கப்படும் என்றும் கூறினார்.  தோலிபிரேமா படத்தில் பவன் கல்யாணின் தங்கையாக நடித்த வாசுகி கதாநாயகியாக நடித்துள்ளார். 



மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? வெளியானது அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ