நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பின் முழு விவரம்: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவகார்த்திகேயன்:
சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார். இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தற்போது வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தவகையில் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படி அணைவருக்கும் பிடித்த நடிகராக தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் அயலான் (Ayalaan) படம் பொங்கல் பண்டிகை தினத்தில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தில் வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.


நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பம்:
கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி சிவாகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்தான். தனது மகனுக்கு மறைந்த தனது தந்தை தாஸின் நினைவாக ’குகன் தாஸ்’ என பெயரிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். 


மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? இதோ நாமினேஷன் லிஸ்ட்!


சிவகார்த்திகேயன் சம்பள விவரம்:
நாளைய கோலிவுட்டின் எதிர்காலமே என்று நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இளம் நடிகர்களில் அசுர வளர்ச்சி அடைந்து இளம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக அசத்தி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதுப்படங்களுக்கு அதிகபட்சமாக நடிகர் சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.


நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு (Actor Sivakarthikeyan Net Worth) சென்னையில் சொந்த வீடு உள்ள நிலையில், சமீபத்தில் தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் பிரம்மாண்ட புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையும் நடத்தி இருந்தார். எனவே சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒட்டுமொத்தமாக 110 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரகுராம் சொன்ன வார்த்தை-காணாமல் போன ஜானகி! சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ