சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். தனது மேலாளரான பூஜா தத்லானி மற்றும் இயக்குநர் அட்லியுடன் அவர் தோன்றும் புகைப்படங்களும் வெளியாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அவர் விரைவில் குணமடைய பலர் வாழ்த்தும் தெரிவித்துவந்தனர். இதற்கிடையே தமிழகத்தில் நடந்த திருமணத்தில் அவர் கலந்துகொண்டது எப்படி என பலரது மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.



இந்நிலையில் அதுகுறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஷாருக்கான் கொரோனாவிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் அதன் பிறகே நயன்தாராவின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில நாட்கள் கடந்த பின்னரே அந்த விஷயம் பொதுவெளிக்கு தெரிய வந்ததாகவும் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் ஆகிவிட்டதால் அவர் தற்போது குணமடைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.


 



மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!


நயன்தாரா அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்கவுள்ளார். நயன்தாராவுக்கு முதல் பாலிவுட் படமாக இது அமையவுள்ளது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையில்தான் நயன்தாராவின் திருமணத்துக்கு ஷாருக்கான் வந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நயன்தாரா எனும் நம்பிக்கை நாயகி! - நயனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR