அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்.அவருக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், தன்னை தல என்று அழைக்க வேண்டாமென்று கூறினாலும் ரசிகர்கள் அவரை ரசிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர் மன்றங்களை கலைத்ததால் அஜித்திற்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படுமென்று பலர் நினைத்தனர். ஆனால், அதன் பிறகு அவரது படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். 


'


சமீபத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாகவும் அஜித் வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.


மேலும் படிக்க | KGF 3 எப்போது கேள்விக்கு விடையளித்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ராக்கி யஷ்


இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் இணையவிருப்பதால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கும் எஸ்.எஸ். ராஜமௌலி தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அஜித் குறித்து பேசிய அவர், “ஒருமுறை ஹோட்டல் ஒன்றுக்கு மனைவியுடன் சாப்பிட சென்றிருந்தேன். அங்கு அஜித்தும் இருந்தார். 



என்னை பார்த்ததும் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் என்னுடன் இருந்தவர் எனது மனைவி என தெரிந்ததும் எழுந்து நின்று நான் அஜித்குமார் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அவர் அப்படி நடந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.


மேலும் படிக்க | குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


அதுமட்டுமின்றி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என கூறியது எனக்கு ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR