கோபத்தில் குதித்த ஆதி! சபதம் எடுத்து டிவிஸ்ட் கொடுத்த ஸ்வேதா! இதயம் சீரியல் அப்டேட்
Idhayam Today`s Episode Update: ஆதியின் கோபத்தால் அதிர்ந்து போன குடும்பம்.. ஸ்வேதா எடுத்த சபதம் - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.
இதயம் மே 13 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? திரையில் பார்ப்பதற்கு முன்பு தெரிந்துக் கொள்வோம்...
இன்றைய எபிசோடில் பாரதிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண பாக்குறியா என்று அங்கு வரும் ஒருவன் பாரதியைப் பார்த்து கேள்வி கேட்கிறான். அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எனவே, சரவணன் யாரு நீ என்று விசாரிக்க, ‘என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டு ஏமாத்திட்டா!’ என்று பாரதி மீது பழி போடுகிறான்.
எங்க எப்போ காதலிச்சீங்க என்பது குறித்து விசாரிக்க அவன் அதை அவ கிட்டயே கேளுங்க என்று சொல்கிறான். பாரதி எனக்கு இவனை தெரியாது என்று சொல்லி விடுகிறாள். இதையடுத்து சரவணன் பாரதி மீது பழி போட்ட அவனை அடி வெளுத்தெடுக்க ஆதியும் அவனை பிடித்து அடிக்கிறான்.
இதைப் பார்த்ததும் ஆதியின் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஏகாம்பரம், அறிவு, ஸ்வேதா ஆகியோர் தனியாக நின்று ஆதிக்கு இவ்வளவு கோபம் வருமா என்று ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கு என்னவோ இது கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு தோணுது என்று ஏகாம்பரம் சொல்ல, ஸ்வேதா இந்த கல்யாணத்தை நான் எதிர்த்து காட்றேன் என்றும் ஆதி மாமா என் கழுத்துல தான் தாலி கட்டுவாரு என சவால் விடுகிறாள்.
அதற்கு, என்னமா பண்ண போற என்று அறிவு ஸ்வேதாவிடம் கேட்க, பொறுத்திருந்து பாருங்க என்று சொல்லி கிளம்பி சென்று விடுகிறாள்.
அதன் பிறகு ஏகாம்பரம் ஆதியை போட்டு தள்ளிட்டா போதும், இந்த சொத்து மொத்தமும் நமக்கு தான் என்று கணக்கு போடுகின்றனர். அதன் பிறகு பாரதி ரூமுக்குள் இருக்க ஆதி பாரதி பெயரை சொல்லிக் கொண்டே உள்ளே வர ஆதியை பார்த்ததும் பாரதி ஒளிந்து கொள்கிறாள்.
இதை கவனித்த ஆதி, பாரதி தேடி வருவது போல அவளை நெருங்கி வந்து முத்தமிட செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?
இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | பட்டைய கிளப்பும் ரஜினிகாந்த்தின் வேட்டையன் ஷூட் .. இதோ அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ