இதயம் அப்டேட்: ஆரத்தி எடுக்க கூட ஆளில்லை.. பாரதிக்காக ஆதி எடுத்த முடிவு
Idhayam Today`s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.
இதயம் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துரை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டியது தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது துரையின் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா அவனை போட்டு அடி வெளுப்பது மட்டுமின்றி தாலியை கழட்டி அவன் முகத்தில் எறிகிறாள், அடுத்து அறிவும் நீ எப்படி டா என் பொண்ணு கழுத்தில் தாலி கட்டலாம் என்று ஓட ஓட அடித்து விரட்டுகிறான். மறுபக்கம் ஆதி பாரதி கழுத்தில் தாலியை கட்டியதை பார்த்து மரகதம், தனம் ஆகியோர் அதிர்ச்சி அடைய ரத்னம் சந்தோசப்படுகிறார்.
அறிவை சந்திக்க வரும் துரை, மணி
அடுத்து துரையும் மணியும் அறிவை சந்திக்க வர இவன் எதுக்கு இங்க வந்தான் என்று அறிவு கோபப்படுகிறார், இவன் எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்டி இருக்கான் என்று ஆவேசப்பட மணி அவன் சொல்றதை கொஞ்சம் கேளுங்க சார் என்று தடுத்து நிறுத்துகிறான்.
நான் பாரதி பக்கத்தில் தான் உட்கார்ந்து இருந்தேன், எனக்கு என்ன நடந்துச்சு.. எப்படி ஸ்வேதா பக்கத்தில் வந்தேன்னு எதுவும் புரியல, எனக்கு என்னமோ என் அண்ணனோட ஆத்மா அந்த ஆதி, பாரதிக்கு துணையா இருக்குனு நினைக்கிறேன். அவங்களை எதுவுமே பண்ண முடியாது போல என்று கோபப்படுகின்றனர். அடுத்து சரவணன் நீ நினைச்ச மாதிரியே உனக்கும் பாரதிக்கும் கல்யாணம் நடந்துடுச்சு என்று வாழ்த்து சொல்லி மனதுக்குள் உனக்கு இதயத்தை கொடுத்தவனோட மனைவியை தான் நீ கல்யாணம் பண்ணி இருக்க என்று நினைத்து கொள்கிறான்.
மேலும் படிக்க | 8 வருட இடைவேளைக்கு பிறகு..திரையுலகில் கம்-பேக் கொடுக்கும் பிரபல நடிகர்!
ஆரத்தி எடுக்ககூட ஆளில்லை
அடுத்து ஆதியும் பாரதியும் வீட்டிற்கு வர ஆரத்தி எடுக்க யாருமே இல்லாத நிலையில் ஆதியே பாரதிக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைக்க பாரதி ஆதிக்கு பொட்டு வைத்து விடுகிறாள். வீட்டிற்குள் வந்ததும் விளகேற்றி சாமி கும்பிடுகின்றனர். அடுத்து ஆதி எல்லாருக்கும் உடனே வீட்டிற்கு வரணும், இல்லனா வேற வீடு பார்த்துக்கோங்க என்று வாய்ஸ் மெசேஜ் போட்டு அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?
இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ