யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Yogi Babu Starring Vaanavan Movie : யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பணிகளை துவக்கிய வானவன் படக்குழு!

Written by - Yuvashree | Last Updated : May 20, 2024, 08:02 PM IST
  • யோகி பாபு நடிக்கும் புதிய படம்
  • படப்பிடிப்பு முடிந்தது
  • ரமேஷ் திலக் ஹீரோவாக நடிக்கிறார்
யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது! title=

Yogi Babu Starring Vaanavan Movie : ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு,  ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது. 

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும்  மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.

யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன்  இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | யோகி பாபுவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான மாஸ்குரேட் சீரிஸை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. 

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. EDENFLICKS PRODUCTIONS பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

மேலும் படிக்க | விஜயகுமார் நடித்துள்ள எலக்சன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News