Ilaiyaraaja Biopic, Maestro Ilaiyaraaja birthday: மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படுபவர், இளையராஜா (Ilaiyaraaja). இந்திய திரையுலகில் சுமார் அரைநூற்றாண்டாக தொடரும் இவரது சாதனை அவ்வப்போது பிரபலங்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வந்தாலும், அதை இன்னும் பெரிய அளவிற்கு கொண்டு செல்ல இவரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் தனுஷ், இதில் ஹீரோவாக நடிக்கிறார். 


மேலும் படிக்க | லீக்கானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு.. உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்


இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு:
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் திறப்பு விழா சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், தனுஷ் மற்றும் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இளையராஜாவை பாராட்டி பேசிய பிரபலங்கள், இப்படத்தில் பணிபுரிய ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக கூறினர்.


இரண்டு பாகங்களாக தயாராகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு:
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாகப் போவதாக கூறப்படுகிறது. 50 வருட வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, முதல் பாகத்தில் இளையராஜாவின் இளமை வாழ்க்கை காண்பிக்கப்பட உள்ளதாகவும், அடுத்த பாதியில் அவர் செய்த சாதனைகளை காண்பிக்கப்பட உள்ளதாகவும் திரை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


இன்று ‘இசைஞானி’ இளையராஜாவின் பிறந்தநாள்:
இதனிடையே இன்று இளையராஜாவின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் அவரை அனைவரும் தங்கின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் 1000 திரைப்படங்களுக்கு மேல், 7000 பாடல்களை இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. மேலும் பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமிக் விருது என பல விருதுகளை வென்றுள்ள இளையராஜா தற்போது எம்பி ஆகவும் உள்ளார். இளையராஜா தனது பாடல்கள் மூலம் பல ஹீரோக்களை வெற்றி பெற வைத்துள்ளார்.  50 ஆண்டுகளில் 20,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளை முடித்த ஒரே இசைக்கலைஞர் இளையராஜா. முக்கியமாக தற்போது இருக்கும் ரஜினி, கமல் என இருவருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.  மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பல ஹீரோக்களின் படங்கள் இளையராஜா இசையால் வெற்றி பெற்றுள்ளது.


இளையராஜா படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர்:
இந்நிலையில் தற்போது இன்று இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா பயோபிக் படத்தைத் தயாரிக்கும் படக்குழு, அப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தனுஷ் எக்ஸ் தளத்தில் போட்ட பதிவில், ‘ஒரே ஒரு இளையராஜா சாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.



மேலும் படிக்க | இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ